Tuesday, January 10, 2017

சந்தியாராகம்


ஒன்பதாவது படிக்கும் போது உள்ள விடுமுறைக்காலம் என்று நினைக்கின்றேன் அது. நான் ஒரு நாள் ஆற்றில் போயி குளித்து வரும் போது வேலியின் அருகில் நின்று ஒருவர் என்னை கூப்பிட்டார். யார் ஏன்று பார்த்த போது தெரிஞ்ச சார் பல் துலக்கிக் கொண்டு நின்றிருந்தார். எங்களுடைய சீனீயர் கிளப்பின் செகரெட்டரியும் தான் அவர்.

உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லனும், கொஞ்சம் வீட்டுக்கு வா...”

நான் கேட்டேன், “ என்ன விஷயம்..?”

என் தங்கையோட பசங்க வந்திருக்காங்க பெங்களூரிலிருந்து. அவனுக்கு இங்கே ரொம்ப போர் அடிச்சுட்டு இருக்கான். உங்களுடைய டீம்ல அவனையும் சேர்த்துக்கோங்க என்ன... நீ வா நான் அறிமுகபடுத்தி வைக்கிறேன். “ சார் சொன்னார்.

அன்றெல்லாம் நாங்கள் ரொம்ப சீரியஸாக கிரிகெட் விளையாடி கொண்டிருந்த காலமாக இருந்தது. காலை முதல் மதியம் வரை ரப்பர் பந்திலும், சாயங்காலம் சீனீயர்ஸ்களுடன் ஸ்டிச்சு பந்திலுமாக விளையாடிக் கொண்டிருந்தோம்.

அப்படி நான் அவர்களுடைய வீட்டின் முன்பாக சென்று நின்ற போது ஒரு 10 – 12 வயசு பொன்னு கதைபுத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். வீட்டினுள்ளிருந்து என்னுடைய அதே வயதுடைய ஒரு பையனின் மற்றும் சாரின் பேச்சு கேட்டது. ஆங்கிலம் எனக்கு பேச அவ்வளவு வராது என்றாலும் கேட்டால் புரியும்.

அவன் சொல்வது கிட்டத்தட்ட இது போன்றிருந்தது.

இந்த லோக்கல் பசங்க கூடயெல்லாம் நான் விளையாடனும்னா மாமா நீங்க  சொல்றீங்க...! முடியாது.”

எனக்கு அது கேட்டு அவனிடத்தில் கெட்ட கோபம் வந்தது. சாரோ பாதி ஆங்கிலத்திலும் தமிழிலுமாக முடிந்த வரை அவனிடம் எங்களை சப்போர்ட் செய்து பேசி கொண்டிருந்தார்.

டேய்.., நீ நினைக்கிற மாதிரி ஒன்னுமில்ல, எல்லாம் நம்ம பசங்க தான், நீ போயி பாரு....புடிக்கும்” என்றெல்லாம்.

இவர்களுடைய உரையாடளின் நீளம் அதிகரித்த போது  நான் அமைதி இழந்தேன். அந்த பெண்ணோ என்னையும் உள்ளே நடக்கின்ற உரையாடலையும் மாற்றி மாற்றி கவனித்துக் கொண்டே இருந்தாள்.

கொஞ்ச நேரம் முடிந்த பிறகு சார் வெளியில் வந்து என்னிடம் சொன்னார்.

அது வந்து, நீ இப்போ போயிக்கோ... நான் கொஞ்ச நேரமான பிறகு சந்தோஷையும் கூட்டி நீங்க விளையாடற இடத்துக்கு வரேன்....”

இல்ல சார், இப்பவே டீம்மில ஆளு நிறைந்திருக்கு...”நான் சிறியதாக இடையூறு செய்தேன். சாருக்கு அப்போது புரிந்தது நான் உள்ளே அவர்களின் உரையாடல் கேட்டேன் என்று.

அதை நான் ரகுவிடம் பேசிக்கிறேன்,  ஏதானாலும் ஒரு பத்து மணிக்கு நாங்க கிரௌண்டிற்கு வரோம்  “ சார் சொன்னார்.

{ரகுவண்ணன் தான் அன்று எங்களுடைய ‘பி’ டீமின் கேப்டன்.)

நான் வீட்டிற்கு போய் திரும்ப காலை செஸ்ஷன் கிரௌண்டிற்கு சென்றவுடன் ரகுவண்ணனிடம்  இந்த விஷயத்தை சொன்னேன்.

ரகுவண்ணே, பெரிய பிரச்சனை ஒன்னு வரப்போகுது, அவனை நாம சரி பண்ணனும் “

ஆனால் ரகுவண்ணனின் நிலைப்பாடு வித்தியாசமாக இருந்தது.

அவன் வரட்டும் டா, நான் இல்லாட்டாலும் ஒரு பாட்ஸ்மேனை தேடிக்கிட்டு தான் இருக்கிறேன், உன்னையெல்லாம் மேட்ச்சிற்கு பேடும் கட்டி இறக்கிவிட்டா நான் பாக்கிறேன் இல்ல, அஞ்சு நிமிஷம் முழுசா நிக்க முடியுதா கிரீஸ்ல...? ”

ரகுவண்ணன் ஒரு கேப்டனின் ரோஷத்தை வெளிபடுத்தினார்.

ஓ... அப்போ நம்மகிட்டேயேவா..., அப்ப சரி நடக்கட்டும் என்று நானும் இருந்தேன்.

கொஞ்சம் நேரமான பிறகு தூரத்தில் நின்று வருவதை பார்த்தேன், நம்முடைய ஸ்டார் சந்தோஷ், ஒரு பேட்டும் பிடித்து கொண்டு. மருமகனின் பின்னால் சாரும் வருகிறார்.

முதல் அறிமுகப்படுத்தளிலேயே அவன் ரகுவண்ணனிடம் கேட்டான் :

என்னுடைய அப்பா இப்போ பிளடால்ப்ஹியாவில் இருக்கிறார், இந்த பிளடால்ப்ஹியா என்று கேட்டிருக்கிறீகளா....?

ரகுவண்ணன் சொன்னார், “இல்லை, உசிலம்பட்டின்னு கேட்டிருக்கிறேன்...”

ஆனால் அத்துடன் ரகுவண்ணனுக்கும் அவனிடத்தில் ஆத்திரமானது.

சரி அப்போ சுனிலை கூப்பிடுங்கடா...” ரகுவண்ணன் சொன்னார்.

[அன்று எங்களுடைய ‘பி’ டீமின் ஒபெனிங் பௌலராக இருந்தது சுணில் தான். அவனுடைய இரண்டு ஓவர் ஒருத்தன் விளையாடினால் தெரியும் அந்த பேட்ஸ்மேனின் ஸ்கில் என்னவென்று. ]

ஏதானாலும் பேட்டிங் டெஸ்டிற்கு தயாரான போது சந்தோஷ் சின்னதாக எங்களுக்கொரு கிளாஸ் எடுத்தான் எப்படி பேட்டிங் கார்டு எடுப்பது என்பதை பற்றி. ஆனால் அதெல்லாம் கேட்ட பிறகு, மேடை ஏறினாள் ஆள் மாறிவிடுவார் என்று சொல்வது போல் ரகுவண்ணன் தனி ப்ரோபெஸ்னலாக எங்களை சிலிப்புகளில் கள்லியிலும் எல்லாம் பீல்ட் செட் செய்து வைத்து நின்றார். சுணில் ஓடி வந்தான், முதல் பந்தையே யோர்க் செய்ய வைத்தான்,  பையனின் லெக் ஸ்டம்ப் காணவில்லை. திரும்ப அவன் ஸ்டம்பை வைத்தாலும் உடனடி அது போகும்...இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

அந்த பக்கம் நிற்கின்ற சாரின் முகம் பார்த்தால் தெரியும் அவரும் சம்பவங்களை ரசித்து கொண்டிருக்கிறார் என்று, ஆனால் மருமகன் என்பதால் அவரால் உரக்க சிரிக்கவும் முடியவில்லை.

ஏதானாலும் அன்றிலிருந்து எங்களுக்கு விளையாட்டு சொல்லி தர வந்த சந்தோஷ் வாலை சுருட்டி திரும்பினான். அதற்கு பிறகு அவன் விளையாடவும் வந்ததில்லை, எங்களிடம் பேசுவதுமில்லை.

ஆனால் இவனுடைய தங்கையோ என்னுடைய வீட்டின் அருகில் உள்ள டிராயிங் டீச்சரிடம் வரைய கற்றுக் கொள்ள வந்து கொண்டிருந்தாள். பெரும்பாலான தினங்களும் பார்க்க நேரும் போது அவள் பழக்கப்பட்ட முகம் என்பது போல் என்னிடம் புன்சிரிக்கவும் செய்வாள். ஆனால் எனக்கு இவளுடைய அண்ணன் மீதுள்ள கடுப்பின் காரணத்தால் நான் அவளை தவிர்த்தேன். (பிற்காலத்தில் ஒரு பெண்னின் புன்சிரிப்பிற்காக காத்திருந்ததுண்டு, இவளுடைய சிறு வயதின் சாபமாக இருப்பதற்கு தான் வழி).

பிற்பாடு ஒரு விடுமுறை காலத்தில் கூட இவர்களை பார்த்த ஞாபகம் இருக்கு. எதுவானாலும் பிள்ளை பருவம் அப்படி கடந்து சென்றது. நான் பெங்களூரில் இன்ஜினியரிங் படிப்பதற்கு சேர்ந்தேன். மூன்றாவது வருஷம் படிக்கும் போது ஒரு கோவில் திருவிழா காலத்தில் நான் கிராமத்திற்கு வந்தேன். ஏழு நாட்கள் வரை இருக்கும் அந்த திருவிழா. மாலை நேரம் தான் ரொம்ப விசேஷம். ஒரு நாள் காலையில் நான் ஆற்றில் நீராடி விட்டு வந்து கொண்டிருந்தேன். அப்போது எதிரில் இருந்து நீல சுடிதார் அணிந்து ஒரு அழகான பெண்ணும் அவளுடன் ஒரு பத்து வயது சிறுமியும் வந்து கொண்டிருந்தார்கள். இவ யாரப்பா புதுசா ஒரு கலர் நம்ம ஊர் பக்கம் என்று அவளை பார்த்து கொண்டே நினைத்த போது தான் அவள் என்னை பார்த்து சிரிக்கின்றாள்..! நான் அத்துடன் சற்றே பதறினேன். இனி அவள் என்னை நோக்கி தானோ  ...??? அதே நேரம் எங்கேயோ பார்த்து மறந்த புன்முறுவல்.. அப்போது தான் ஆளை நினைவிற்கு வந்தது. சந்தியா இல்லையா இவள், சந்தோஷின் தங்கை. ஈஸ்வரா .. பெண்கள் இப்படியும் மாறி விடுவார்களா..?

அதற்குள் நாங்கள் ரொம்பவே அருகில் வந்து விட்டிருந்தோம். கொஞ்சம் பதட்டத்துடன் நின்ற என்னிடம் அவள் கேட்டாள்...

தெரியுமா....?”

பின்ன என்ன.., ஆனால் முதல்ல எனக்கு அடையாளம் கண்டு கொள்ள முடியல..”

எனக்கு புரிஞ்சுது..” அவள் சிரித்து கொண்டு சொன்னாள்.

அதற்கு பின் கொஞ்சம் நிமிஷங்கள் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தோமே தவிர வேறொன்றும் பேசவில்லை. ஒரு வேளை, கடந்த இந்த ஐந்து ஆண்டுகளில்’ எங்களுக்குள் உண்டான மாற்றங்களை நாங்கள் அளந்தோமோ என்னமோ..!!!

ஒரு தொடக்கம் இடுவதற்க்கென்று அவளுடைய அண்ணனை குறித்து கேட்டேன். அவனும் இன்ஜினியரிங் படித்து கொண்டிருக்கிறான். இனியும் பார்ப்பதற்கு சான்ஸ் இருக்கா என்றறிவதற்கு சாயங்காலம் திருவிழாவில் பார்க்க வருவியா என்று நான் விசாரித்தேன். அவர்கள் அம்முறை திருவிழாவில் பங்கு கொள்வதற்காகவே  வந்திருக்கிறார்கள் கிராமத்திற்கு.

அதற்கு அப்புறமும் பேசனும் என்றிருந்தாலும் நடைபாதையில் வேறு யாரோ வரும் சத்தம் கேட்டு அவள் போக முனைந்தாள்.  சந்தியா நடந்து போவதை நோக்கி ஒரு சுகமான அவஸ்த்தையில் நின்றபோது தான் எதிர்பாராத விதமாக அவள் திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தாள். ஒரு பெண் அப்படி செய்வதென்றால் அதற்கு ஒரு அர்த்தம் தான் உள்ளது, வேறொரு வகையில் சொல்வதென்றால் ஒரு பெண்ணிற்கு ஒருவனை பிடித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்ற ஒரு அற்புதமான முறை. அவள் நேசத்தை அறிந்த நான் அந்த நிமிஷத்தில் நான் அல்லாமல் கரைந்து போனேன். அதை எழுதி புரிய வைப்பது என்பது கடினம், ஆனாலும் இன்றும் நினைவில் தங்கி நிற்கிறது அந்த காட்சி.

அன்று முதல் ஒவ்வொரு மாலையிலும் கோவில் திருவிழாவில் வைத்து நாங்கள் காணலானோம். பொதுகூட்டத்தில் உற்றார் உறவினர்கிடையில் நிற்கும்போது ஒருவருக்கு ஒருவர் பழகுதல் என்பது நடக்காத காரியம். அதே நேரம் அந்த கூட்டத்திற்கிடையிலும் யாரும் அறியாமல் ஒருவருக்கு ஒருவர் இடையில் பரிமாற்றம் செய்யும் ஒரு புன்னகையும், பார்வையும் என்றென்றும் நினைவில் வைக்கின்ற காதல் நிமிஷங்கள்..

ஆனால் திருவிழா முடிந்த பிறகு எங்களால் அதிகம் ஒன்றும் பார்க்க இயலவில்லை. பின்னால் பல முறை கனவு கண்டேன். படிப்பு முடிந்த பின் அவளுடைய வீட்டிற்கு சென்று பெண் கேட்க வேண்டும் என்றெல்லாம். ஆனால் அன்று எனக்கு தெரியவில்லை என்னுடைய மனதின் நேசத்தை மிகவும் எழுப்பிய அந்த பெண்னையும் அற்புதமான அந்த காதல் அனுபவத்தையும் என்றென்றைக்குமாக நஷ்டபட போகிறேன் என்று.

இன்ஜினியரிங் முடிந்த போது ஒன்றும் நினைத்து போல் நடக்கவில்லை. வேலை தேடி அலைதல் மூன்று வருடம் வரை நீண்ட போது மனதின் உணர்ச்சி அம்சங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உதிர்ந்தும் நான் மேலும் நடைமுறைவாதியாகவும் மாறினேன். பின்பு வேலை கிடைப்பதற்குள் தாமதமாகி விட்டிருந்தது என்று நான் அறிந்தேன், சாரை பார்த்த போது.

ஒன்றிரண்டு வருடங்கள் கடந்து விட்டது. வீட்டில் உள்ளவர்கள் எனக்கும் திருமண ஆலோசனைகள் நடத்த தொடங்கி இருந்தனர். அப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் நான் நண்பனின் குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு வாங்குவதற்காக, பெங்களூரில் ஒரு ஷாப்பிங் சென்ட்ரில் நிற்கும் போது ஒரு இரண்டு மூன்று வயதுள்ள சின்ன பெண் குழந்தையை கவனிக்கலானேன். அவள் டேபிளின் மீதுள்ள டோய்ஸ் எல்லாம் எடுத்து தரையிலிடுகிறாள், அவள் அம்மா அனைத்தையும் திரும்பவும் எடுத்து வைக்கிறாள். ஒரு நிமிஷம் அந்த பெண் குழந்தையின் அம்மாவை பார்த்து நான் அதிர்ந்தேன். ஏழு வருஷத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சந்திப்பு..!

என்னை பார்த்ததும் முதலில் அவள் பதறினாலும் சட்டென்றே நாங்கள் திரும்பவும் சாதாரண நிலைக்கு வந்தோம். பிறகு அவள் தன் மாமியாருக்கு என்னை ஊர்காரன் என்று சொல்லி அறிமுகம் செய்து வைத்தாள். முற்றிலும் சம்பிரதாயம் பூர்வமாக நாங்கள் ஐந்து நிமிடம் பேசினோம். எனக்கு ஆர்வமில்லாதவனாக இருந்தாலும் நான் அவள் அண்ணனை பற்றி கேட்டேன். அதே நேரம் அவளின் கணவரை பற்றி கேட்கவுமில்லை. சந்தியா என்னிடம் திருமணத்தை பற்றி கேட்ட போது நான் ஆலோசனை நடக்கிறது என்று சொன்னேன். ஆனால் நல்லோரு பெண்ணை கிடைக்கட்டும் என்று அவள் வாழ்த்திய போது ஏனோ என் மனம் தேங்கியது, மட்டுமல்ல வார்த்தைகளும் வரத் தயங்கியது. அவளுக்கு என்னுடைய அப்போதிய மனோநிலை சிரியாக புரிந்தது. ஒரு ஷன நேரத்திற்கு யாராலும் ஒன்றும் பேச இயலவில்லை. ஏழு வருடங்களுக்கு முன்பு இதே போல் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் பார்த்து நின்றிருக்கிறோம், இன்று ஆனால் நேர் எதிர் மாறான மனநிலை. அதற்கு பிறகு நான் ‘பை’ என்று சொன்னேன் நினைக்கின்றேன். திருப்பி நடந்தேன், ஒரு முறை கூட திரும்பி பார்க்காமல்.
பின்குறிப்பு : -
அதற்கு பின் நாங்கள் இருவரும் பார்த்ததில்லை. ஆனால் என் கண்கள் தேடுவதுண்டு அவளை இந்த நகர வீதிகளில் நடக்கும் போது. பெங்களூர் நகரம் எனக்கு பிரியமானதற்கு ஒரு காரணமும் கூட...

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா.. கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

                                                    --------------
Hi Friends, I have written 25 similar funny stories and made it as a free android app. If you like this story please download the app from google store . Click the below app Link to install from the store. 

 
https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason