Friday, February 3, 2017

இஞ்சி இடுப்பழகி


ஒரு நாள் எங்களுடைய ரூமிற்கு வந்த என்னுடைய நெருங்கிய நண்பன் ஒரு பெண்ணின் போட்டோவை கண் இமைக்கும் நேரத்திற்குள் காண்பித்து மறைத்தான். நானும் முதலில் ஏதோ புதுமுக நடிகையுடையது என்று நினைத்தேன். ஆனால் அது அவன் பெண் பார்க்க போகும் பெண்ணின் போட்டோ என்று அறிந்த போது நான் உண்மையில் பாராட்டினேன்.  

அவனும் மொத்தத்தில் திரிலடித்து இருக்கின்றான். அழகு, படிப்பு, பணம், அந்தஸ்து என்பது போன்று, எல்லா வகையிலும் சிறந்த ஒரு சம்மந்தம்.

இதற்கு உன்னுடைய சாதாரணமாக் கொடுக்கின்ற பார்டி ஒன்னும் பத்தாது,

 இது நடந்தால் உன்னுடைய ஒரு வார பப் செலவு என்னுடையது. என்ன போதுமா...” அவன் அறிவித்தான்.

அந்த வெள்ளிகிழமை நாங்கள் நண்பனை கோலாகலத்துடன் ஊருக்கு வழி அனுப்பி வைத்தோம். ஞாயிற்றுகிழமை தான் பெண் பார்க்க போகும் நாள். அவனோ போட்டோவை கையிலிருந்து கீழே வைத்தபாடு இல்லை. அதற்குள் அந்த அளவுக்கு காதல்.

அப்படி ஞாயிற்றுகிழமை மதியமும் முடிந்தது. ரிசல்ட்டை அறிவதற்கு நான் கூப்பிடலாம் என்று ஆலோசிப்பதற்குள் அவனிடமிருந்து போன் ஒலித்தது. எடுத்தவுடனே அவன்,

 டேய் நாளைக்கு உன்னை பார்க்க முடியுமா, முடிந்தால் காலையிலேயே...”

நான் முதலில் நினைத்தேன் இவன் ட்ரீட் கொடுப்பதற்கு துடிச்சுகிட்டு இருக்கிறான்னா என்ன. 

 பெண் பார்த்து என்ன ஆச்சு, எல்லாம் ஓகே தானே..”

 நான் வந்திட்டு சொல்லறேன்..” அவன் போனை வைத்தான்.

அடுத்த நாள் காலையில் நான் எப்பொழுதும் போல கம்பெனிக்கு சென்றேன். ஆனால் மதியமாவதற்கு முன்பே அவன் போனில் விடாது அழைத்துக் கொண்டே இருந்தான். அப்படி நான் ஒரு பாதி நாளுக்கு லீவ் எழுதி கொடுத்து நேராக மடிவாளா.(பெங்களூரில் நாங்கள் தங்கியிருந்த இடம்) என்ற இடத்தில் உள்ள இன்விடேஷன் பாரின் முன்பாக வந்து நின்றேன். அங்கெ அவனும் வேறொரு நண்பனுடன் எனக்காக காத்து கொண்டிருந்தனர்.  

என்னோட வாழ்க்கையின்  பிரச்சனைடா அதனால தான்....” அவன் கொஞ்சம் சோகமான குரலில் தெரிவித்தான்.

நாங்கள் இரு நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். என்ன ஆச்சு இவனுக்கு...? இரண்டு நாள் முன்னாடி எவ்வளோ சந்தோஷமாக எதிர்பார்ப்புடன் வீட்டுக்கு போனான்.

பாரில் அமர்ந்த பிறகு அவன் சொல்ல தொடங்கினான்.

நேற்றைக்கு எல்லாம் நன்றாக தான் போயிட்டிருந்தது, நங்கள் இருவரும் தனியாக பேசவதற்கு அமர்ந்து அவள் பேச தொடங்கும் வரை....,

ஒரு நிமிஷத்திற்கு பிறகு அவன் தொடர்ந்தான்,

பேசி வருகையில் அவள் சொல்கிறாள் அவளுக்கு ஒரு உண்மையை தன்னை கல்யாணம் செய்கின்றவரிடம் சொல்ல வேண்டும் என்று. பிறகு சொல்கிறாள் அவளுக்கு ஒரு நண்பன் இருந்தான் என்றும் மேலும் ஒரு முறை அவர்கள் இருவரும் தவறு செய்திருகிறார்கள் என்றும்.”

நாங்கள் இதை கேட்டு திடுகிட்டோம்.  ரோஜா படத்தில் அரவிந்தசாமி எதிர்கொண்டதெல்லாம் ஒன்னுமே இல்லை இதனுடன் ஒப்பிடுகையில். எனக்கு நிஜத்தில் அவனிடத்தில் பாவமாக இருந்தது, எவ்வளவு வேதனை அடைந்திருப்பான் இவன் இதை நேராக அவள் வாயிலிருந்தே கேட்ட போது.                                                                                                                                         
பிறகு ஆவலுடன் நாங்கள், “அதற்கு நீ என்ன சொன்னாய்...?”  என்று கேட்டோம்.

டேய் அது வந்து, அவள் இவ்வளவு சொல்லி முடிப்பதற்குள்ளேயே அழத் தொடங்கினாள். எனக்கு என்னவோ அப்போ அவளை சமாதானப் படுத்தவே தோணியது. நான் எதிர்பார்ப்பை கொடுத்து விட்டேனோ என்றொரு சந்தேகம். இது வரைக்கும் நான் வீட்டில் ஒன்னும் தெரிவிக்கவில்லை. என்ன செய்யனும். ஒருத்தி அப்பாவியா இவ்வளவு மனம் திறந்து சொல்லும் போது ....” அவன் பேச்சை பாதியில் நிறுத்தினான்.

எனக்கு அவனுடைய மனோநிலை நன்றாகவே புரிந்தது, ஆனால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த சமயத்தில் இதெல்லாம் கேட்டு எங்களுடன் இருந்த ரூம்மேட் நண்பன் தீடிரென்று சொன்னான்,

மச்சான் இதை நீ ஜென்மத்தில சம்மதிக்க கூடாது. அவள் அவ்ளோ அப்பாவினு எனக்கு தோணல...”

நாங்கள் திடுகிட்டு, செவி கூர்ந்தோம். அவன் மேலும் தொடர்ந்தான்..,

அவளுடைய இந்த சம்பவம் ஊரில் கொஞ்சம் எல்லாருக்கும் தெரியும் என்று வைத்துக் கொள்வோம். கல்யாணம் ஆனா பிறகு கண்டிப்பா உனக்கு இது தெரிய வரும் என்று உறதி உள்ளதினால் அவள் ஒரு முன் ஜாமீன் எடுத்தாக இருந்திச்சுன்னா..? அப்படி பார்த்தால் இனி ஒரு வேளை தெரியாமல் ஒரு பெண்ணிற்கு தவறு நடந்திருந்தால் போலும் அதை மூடி வைப்பதற்கு முயற்சிப்பவள் தானே நிஜத்தில் அப்பாவி..”

அதற்கு நல்லவொரு வாய்ப்பு இருக்கு என்று எனக்கும் தோணியது. அத்தோடு நானும் அவனை  அந்த சம்மந்தத்திலிருந்து பின்வாங்க வலியுறுத்தினேன்.

நீ ஓடி தப்பிச்சுடு, அவளே முன்பில் ஒரு வழி காண்பித்திருக்கிறாள் இல்லையா.  அதிகமா சந்தோஷப்பட வேண்டிய இந்த நேரத்தில நீ சங்கடபட்டுகிட்டு இருக்க வேண்டிய அவசியம் என்ன...”

அப்படி அந்த சம்மந்தம் தட்டி போனது. அவன் இப்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து வெளிநாட்டில் சுகமாக வாழ்கிறான்.

நான் இந்த சம்பவத்தை எப்பொழுதாவது யோசித்து பார்ப்பது உண்டு. அதாவது இனி ஒரு வேளை அந்த பெண் உண்மையான குற்ற உணர்வின் காரணத்தால் மனம் திறந்து சொல்லி இருந்தால், நாங்கள் அவனை அப்படி உபதேசம் கொடுத்தது சரிதானோ ..? என்று. 

இதில் எனக்கு தோணிய விஷயம் என்னவென்றால், நம்முடைய வாழ்வில் இரண்டு சரிகளுக்கிடையில் ஒரு மோதல் நடக்கும் பொழுது, அதில் நாம் கூடுதல் சுயநலமுள்ள சரியின் பக்கம் சேருவது தான் எப்பொழுதும் நல்லது. 

நண்பர்கள் நம்முடைய விலைமதிக்கமுடியாத சொத்து. அவர்கள் நல்ல நிலையில் வாழ்வதை காணும்போது மிகுந்த சந்தோஷமும்.

இனி நான் என்னுடைய பெண் பார்க்கும் படலம் பற்றி தான் சொல்லப் போகிறேன்.

நண்பர்களுக்கெல்லாம் கல்யாண சம்மந்தங்கள் நடக்கும் போது தானே நமக்கும் கல்யாண பண்ணனும் என்று தோணும். ஒன்றிரண்டு முறை வீட்டில் நண்பர்கள் பெண் பார்க்க செல்கிறார்கள் என்று தமாஷாக சொல்லி பார்த்தேன். முஹும் எங்கே, எங்க வீட்டில ஒரு அசைவும் காணாம்.  கடைசியில் நினைவு படுத்த வேண்டியதாயிற்று.

அப்பா கேட்டார், “சரி பார்ப்போம்னு. அது இருக்கட்டும், உன்னுடைய மனசுல எப்படிப்பட்ட ஆளு வேணும்னு இருக்கு..”

நியாமான கேள்வி. நமக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும் பதில் சொல்ல. இருந்தாலும் மனதிலுள்ள ஏறக்குறைய சங்கல்பம் சொன்னால் தானே அவர்களுக்கும் அதற்கு ஏற்றார்போல் தேட வசதியாக இருக்கும்.

நான் சொன்னேன்,

அது இப்போ, பார்க்க அழகாகவும், படிச்சிருக்கவும் செய்துள்ள ஒரு பெண். வேலை இருந்தால் நல்லது.”

(சுருக்கமாக சொன்னால் எல்லாம் வேணும். ஆனால் குடும்பவும், செல்வசெழிப்பு எல்லாம் அவங்க பார்த்ததுக்குவாங்க என்பதாக இருந்தது என்னுடைய எதிர்பார்ப்பு.)

சரி, அப்படியே ஆகட்டும், அப்பாவும் சொன்னார். ஆனால் இந்த உரையாடல் முடிந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். மறந்தே போயிட்டாங்கன்னு  நினைக்கிறேன். தேவை நம்முடையதாச்சே, மீண்டும் ஊருக்கு சென்ற போது ஞ்சாபகபடுத்தினேன்.

அன்னிக்கு சொன்ன விஷயம் என்னாச்சு..?”

ஓ அதுவா, பார்க்க தொடங்க போறோம். இல்ல, உனக்கு எந்த மாதிரியான பெண் வேணும்னு சொன்னே..”

மீண்டும் அதே கேள்வி...., இது ஒரு வகை ராகிங்கில் பண்ற மாதிரி இருக்கு, ஆனால் பார்க்க தொடங்கவும்  இல்ல. என்னோட நண்பர்களின் அப்பாக்கள் எல்லாம் அடிக்கடிப் பெண்களின் போட்டோகளை அனுப்பி அனுப்பி தன்னுடைய பசங்களை ஆசை மூட்டிக்கிட்டே இருக்காங்க. இங்க என்னடான்னா... உள்ளில் மனக்கசப்பு தோணினாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மீண்டும் நான் மனதிலுள்ள பெண்ணைப் பற்றி விவரித்தேன்.

அதற்கு பிறகு திரும்பி வந்த நான் வேலையில் கொஞ்சம் நாட்கள் பிஸியான காரணத்தால் அந்த மாதம் வீட்டிற்கும் போக முடியவில்லை. குறைந்த பட்சம் ஒரு சம்மந்தத்தின் தொடக்கமாவது எதிர்பார்த்தேன், எங்கே...ஒன்னும் நடக்கவில்லை.

பிறகு ஒரு நாள் வீட்டிற்கு போன் செய்த நேரத்தில் சந்தர்பவசமாக நான் மீண்டும் என் விஷயத்தை எடுத்து இட்டேன்.

அப்போது அப்பா கேட்கிறார்,

இல்ல, ஒரு முறை கூட உறுதி செய்வதற்காக கேட்கிறேன், எந்த மாதிரியான பெண் உன்னுடைய மனதில் இருக்கிறாள்..?”

உண்மையை சொன்னால் எனக்கு அந்த நிமிடத்தில் கொஞ்சமும் கோபம் வரவில்லை. முற்றிலும் நிதானமுடையவனாய் நான் சொன்னேன்,

அதுவா, அப்பா... எனக்கு இஞ்சி இடுப்பும், மஞ்ச சிவப்பும் கள்ள சிரிப்புமாக இருக்கின்ற ஒரு பெண் தான் என்னுடைய மனதில் இருக்கிறாள்.... தேடுங்கப்பா... ” என்றேன்.

ஒரு நிமிட நேரம் முடிந்தது. போனின் அந்த பக்கத்திலிருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை. அதிர்ச்சியிலிருந்து விடுபடலை நினைக்கிறேன். நானும் போனை வைத்தேன். விளையாட்டு நம்மகிட்டயேவா...

அடுத்த நாள், ஊரில் இருக்கின்ற ஒன்றிரண்டு நண்பர்கள் அழைத்தார்கள் போனில், அப்பா அவர்களிடமெல்லாம் கூப்பிட்டு விசாரிச்சாராம் எனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கான்னு..?

இந்த யானைக்கு மதம் பிடிக்கிற மாதிரி பெண் கிடைக்காம எனக்கு ஏதாவது பைத்தியம் பிடித்துவிட்டதோ என்பதாக இருந்தது பாவம் அப்பாவின் சந்தேகம்.

எதுவாக இருந்தாலும் அதிகம் தாமதமின்றி என்னுடைய பெண் பார்க்கும் படலமும் உடனடியாகவே நடக்க தொடங்கியது.
                                             ************
Hi Friends, I have A REQUEST.  ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 25 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android story App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்.

 
https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason