Sunday, March 26, 2017

அது நீயாகிறாய்.....


திருட்டு என்பது ஒரு கலை ! பண்டைய காலத்தின் 64 கலைகளில் ஒன்று ! ஒரு காலத்தில் அதை ரசித்து நாங்கள் செய்திருக்கிறோம். அந்த குற்றங்கள் யாரையும் வேதனை படுத்தவில்லை என்ற ஒரு எண்ணம் உள்ளதினால் இங்கே குறித்துக் வைக்கிறேன்.

சாதரணமாக நாங்கள் மாதாமாதம் பழைய பேப்பர்களை மளிகை கடையில் கொடுப்பது தான் வழக்கம். அனால் ஒரு முறை ரகுவண்ணன் (என் உறவினர்) அந்த வழக்கத்திற்கு மாறாக காயிலாங் கடை மொத்த வியாபாரம் செய்யும் ஒரு கடையில் பேப்பர்களை விற்க கொடுத்தார்.

அங்கிருந்த விலைபட்டியல் அவரை திகைப்பூட்டவும் நங்கள் இதுவரை அறியாத ஒரு வணிக வாய்ப்பு திறப்பதற்கு அவை தூண்டுதலாகவும் அமைந்தது.

இரும்பு (கிலோ) – 4.50 ரூபாய்

பிளாஸ்டிக் (கிலோ) -  20 ரூபாய்

அலுமினியம் (கிலோ) -  30 ரூபாய்

செம்பு (கிலோ) - 50 ரூபாய்

இவ்வாராக இருந்தது சுமார் விலைகளின் நிலவாரம். கடையிலிருந்து திரும்பி வந்த ரகுவண்ணன் உடனடியாக இதை எங்களிடம் தெரிவித்தார்.

காலம் காலமாக எங்களுடைய ஊரில் தாய்மார்களுக்கு துச்சமான விலை கொடுத்து காலிபுட்டிக்காரன் வாங்கி கொண்டு போகின்ற சாமான்களுக்கு இவ்வளவு விலையோ...?

ஒரு கிலோ பழைய இரும்பை எல்லாம் ஒன்று கூட்டுவதற்கு எவ்வளவு நேரம் தேவைபடும்..! சர்ச்சை முடிவடைவதற்குள் பலருடைய மனதிலும் திட்டங்கள் பல உருவாக தொடங்கிவிட்டன.

முதற்படியாக வீட்டின் அனைத்து முக்கிலும் மூலையிலும் தேடி பிடித்து கிடைத்த பயனற்ற சாமான்களை எல்லாம் விற்றோம். பத்து பதினைந்து ரூபாய் கிடைத்தது. சந்தோஷம் அளவற்றதானது, காரணம் எங்கள் காலங்களில் சிறுவர்களுக்கு இந்த தொகை மிக பெரிய தொகையாக இருந்தது..

 எனக்கு இன்றும் நினைவில் இருக்கு அந்த நாட்கள், நான் சமையலறையில் ஒவ்வொரு சாமானாக எடுத்து இது உபயோக உள்ளதா என்று திரும்ப திரும்ப கேட்பேன் அம்மாவின் “இது தேவையில்லை” என்று பதிலை எதிர்பார்த்து. வேறென்ன சொல்ல, சிறிது நாட்கள் எங்கள் தொகுதியில் நாங்கள் காலி புட்டி பேப்பர் காரனாகவே மாறிவிட்டோம். எங்கள் கைகளில் பணம் வரத் தொடங்கியதும் எங்களின் வாழ்கை தரமும் மாறியது. முன்பெல்லாம் கிராமத்து சிறுவர்களாகிய எங்களுக்கு டீ கடையில் உள்ள தின்பண்டங்களை பார்த்து ஏங்கி நிற்கவே முடிந்திருந்தது. ஆனால் இன்றோ நாங்கள் இங்குள்ள ஹோடெல்களில் நிரந்திர வாடிக்கையாளர்கள் ஆகிவிட்டோம்.                 

அடிக்கடி பணத்திற்கு கைநீட்ட மாட்டார்களே என்று நினைத்து பெற்றோர்களும் வசதியாக கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் எங்களின்  எல்லையில்லா விற்பனையின் மூலமாக வீட்டிலும் நாட்டிலும் மருந்துக்கு கூட இது போன்ற சாதனங்கள் காணாத நிலை ஆகிவிட்டது. அதன் பலனாக சிறுவர்கள் நாங்கள் மீண்டும் தரித்திரராகத் தொடங்கினோம்.    

எங்களுடைய வீடுகளுக்கு பக்கத்தில்   ஹரிஜன் சிறுவர்கள் தங்குவதற்கான ஒரு ஹோஸ்டல் இருந்தது. அதனுடன் அவர்களுக்கு விளையாடுவதற்கு ஒரு மைதானமும். கோடைவிடுமுறைக்கு அவர்கள் எல்லாம் வீட்டிற்கு செல்லும் போது அருகாமையில் இருக்கின்ற சிறுவர்களான எங்களின் சாம்ராஜ்யமாகி விடும் அந்த இடங்கள் ! அங்கெ நாங்கள் கிரிகெட் பிட்ச்சை ஒப்பனை செய்வோம்.

மைதானத்தின் வடிவின் படி பேட் செய்யும் வலது பக்கத்தில் ஒரு தோட்டம் அமைந்திருந்தது.

அதற்குள் பந்து சென்றால் கிடைப்பதற்கு சிரமமானதால் லெக் சைடில் தூக்கி அடித்தால்அவுட்என்ற விதி வைத்தோம்.[இதிலிருந்து பின்னால் கிடைத்த குணம் என்னவென்றால் நாங்கள் அனைவரும் படிபடியாக  நல்ல ஆப்சைடு ப்லேயர்ஸ் ஆனோம் என்பது தான்.]

அப்படி ஒரு நாள் நாங்கள் கிரிகெட் விளையாடும் போது, எங்களில் ஒருவனான பாபு அடிச்ச பந்து தோட்டத்தில் போயி விழுந்தது. சுவர் தாண்டி குதித்து அந்த பக்கம் போன பாபு பந்தல்லாமல் சுவற்றிற்கு வெளியே போட்டது ஒரு நிதியாகும்.

மண் புரண்ட நீளத்தில் உள்ள இரும்பு துண்டு..! கவனமாக பார்த்த போது இலெக்ட்ரிசிட்டி போஸ்டில் இடையே வைக்கும் தண்டு அது.

எதானாலும் அவன் உடனடி அதில்  உடைமை உரிமை ஸ்தாபித்து, மதியம் சாமானை காயிலாங் கடைக்கு கொண்டு போகின்ற விஷயத்தை குறித்து ஆலோசிக்க தொடங்கினான்.

அவன் கொஞ்சம் டீசன்ட் பார்டியானதினால் மார்கெட் வழியாக இந்த இரும்பை பிடித்து செல்ல அவனுக்கு ஒரு தயக்கம். நான் அவனுக்கு அந்த வேலை செய்வதில் இரண்டு ரூபாய்க்கு உதவுவதாக ஏற்றுக்கொண்டேன்.

அப்போது தான் ரகுவண்ணன் மார்கெட்டிற்கு போயி திரும்பி வரும் வழியில் ஹோச்டலில் வந்தார். சங்கதியின் நிலையறிந்தவுடன்  ரகுவண்ணன் முதலில் அந்த தோட்டத்திற்குள் குதித்து இனியும் ஏதேனும் இருக்கா என்று தேடி பார்த்தார். ம்ஹும்...ஒண்ணும் கிடைக்கவில்லை...!

அதற்கு பின் ரகுவண்ணன் சாதனத்தை கையால் தூக்கி இடை பார்த்த போது சுமார் நாலு நாலரை கிலோ தேறும் என்று நினைத்தார். அதாவது கிட்டதட்ட இருவது ரூபாய்..!

ரகுவண்ணன் தீடிரென்று பாபுவிடம் கேட்டார், பாபு இதை கொண்டு போனால் சுமார் 10 - 12 ரூபாய் கிடைக்கும் உனக்கு, ஒரு பத்து ரூபாய்க்கு எனக்கு தரியா...?

 “நோயாளி விரும்பியதும் பால் வைத்தியர் பரிந்துரைத்ததும் பால்.., என்றபடிக்கு நடுவில் நின்ற என்னை நீராவியாக்கி அவர்கள் வியாபாரம் பேசி முடித்தனர்.

அப்போதே ரகுவண்ணன் கையில் உள்ள பத்து ரூபாய்யை பாபுவிற்கு

கொடுத்து ஒரு வெற்றிவீரனை போல் சாதனத்தை எடுத்து கொண்டு இடத்தை காலி செய்தார். நிராசையடைந்த என்னை பாபு சினிமாவுக்கு கொண்டுபோவதாக சொல்லி சமாதானப் படுத்தினான்.

அன்றுபுன்னகை மன்னன்’ கமலின் சினிமா ஓடிக்கொண்டிருந்தது. மதியமே நானும் பாபுவும் மேட்டனிக்கு சென்றோம், ரகுவண்ணன் மனப்பாயாசம் சாப்பிட்டு காயிலாங் கடைக்கும். ஆனால் அங்கே வந்தடைந்த போது தான் ரகுவண்ணனிடம் அந்த அத்ர்ச்சியூட்டும் உண்மையை காயிலாங் கடைகாரர் சொன்னார்.

கடைகாரர் : “ரகு இதை எடுக்க மாட்டோம்பா...!”

ரகுவண்ணன்  பதற்றத்தோடு : “ஏன்...???!!”

கடைகாரர் : “அதுவா.., இது வந்து கவர்மென்ட்க்கு சொந்தமான பொருள், இதை வித்தொம்னா எங்களை புடிச்சு உள்ளே வெச்சிடுவாங்க.”

ரகுவண்ணனுக்கு பூமி பிளர்வது போல் தோணியது, கொஞ்சம் கண்ட்ரோல் கிடைத்த போது அடுத்த காயிலாங் கடைக்கு ஓடினார். அவரும் இதையே சொன்னார்.

நாங்கள் சினிமாவில் கமல் பாறையிலிருந்து குதித்து பிறகும் மரக்கொம்பில் சிக்கி தவிப்பது போல் சமானமான ஒரு அவஸ்தையில் தான் எங்களுடைய மிகவும் நெருங்கிய நண்பன் அங்கெ பொருளை விற்க முடியாமல் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தார்.

கடைசியில் ரகுவண்ணனின் தயனிய முகம் பார்த்து பரிதாபப்பட்ட ஒரு காயிலாங் கடைக்காரர் சொன்னார், நீ இதனுடைய வடிவத்தை மொத்தமாக மாற்றி கொண்டு வந்தால் எடுக்கலாம்.

அடுத்த நாள் காலையில் எங்களுடைய பகுதியில் வைகறை பொழுது விடிந்தது பறவைகளின் கீச்சிடும் குரல் கொண்டல்ல மாறாக இரும்பும் இரும்பும் சேர்ந்து அடிக்கும் போது உண்டாகின்ற கோர சப்தம் கொண்டு தான். காலையில் விளையாட வந்த நான் ரகுவண்ணனின் வீட்டினுள் ஏற்றி பார்த்தேன். ஆளை காணோம். அவர் அம்மாவிடம் கேட்டேன், “எங்கே ரகுவண்ணன்..?”

ரகுவண்…ணா..!! ஒரு புது கோடாலியின் வாய்யை அப்படியே பையன் நாசமாக்கிட்டான். அங்கெ பின்னாலே போயி பாரு ..” அவர் கோபத்தோடு கத்தினார். நான் பின்புறம் சென்று பார்த்தேன்.

அங்கிருந்த காட்சி ஒரு போர்க்களம் போல்  இருந்தது..!! இரும்பு துண்டு  இடையில்  வைத்து  பெரிய  சுத்தியல்  கொண்டு  ஓங்கி  ஓங்கி அடிக்கிறார்  ரகுவண்ணன்...!

ஒரு பார்வை பார்த்தல்லாமல் என்னிடம் ஒன்றுமே பேசவில்லைபத்து நிமிடம் முடிந்திருக்கும் இவ்வளவு மட்டும் கேட்டார், “எங்கே அந்த பாபு..?”

அந்த முகபாவம் பார்த்த போது பாபுவை கையில் கிடைத்தால் ரகுவண்ணன் அந்த தண்டிற்கு பதிலாக குறுக்கே வைத்திருப்பார் என்று எனக்கு தோணியது. அந்த கோபத்தை என்னிடம் கூட காட்டும் முன்பு நான் அங்கிருந்து இடத்தை காலி செய்தேன்.

ஆனால் சாயங்காலம் அந்த இடத்தை மீண்டும் விஜயம் செய்த போது ரகுவண்ணன் கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்து விட்டது என்று எனக்கு புரிந்தது, இரும்பு தண்டு அங்கில எழுத்து ‘u’  போன்று வளைத்து வைத்திருந்தார்..!

ஆனால் ரகுவண்ணனை பாராட்டுவதற்கு  முயன்ற போது தான் அவருடைய முதுகும் அதே போன்று வளைந்த அவஸ்தையில் இருப்பதை நான் கவனித்தேன்..!

எதானாலும் அடுத்த நாளே ரகுவண்ணன் காயிலாங் கடைக்கு போனார்’, கடைக்காரன் ஒரு சோதனை முயற்சி என்ற நிலையில் ஆறு ரூபாய் கொடுத்தார்.

தன நஷ்டம்மானநஷ்டம், ஒரு முழு தினத்தின் உழைப்பு வேறு,  மொத்தத்தில் சோதிக்கபட்டவனாக தளர்ந்து காயிலாங் கடையிலிருந்து ரகுவண்ணன் திரும்பி வரும் காட்சி எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.

பின் குறிப்பு : -

காலங்கள் கடந்து சென்றன. சமீபத்தில் நான் பெங்களூரிலிருந்து விடுமுறைக்கு கிராமத்திற்கு சென்ற போது வீட்டில் 10 -14 வயது வரக்கூடிய இரண்டு சிறுவர்கள் தேவையற்ற பொருட்கள் கேட்டு வந்திருந்தார்கள். மிகவும் துச்சமான விலைக்கு தான் அவர்கள் கேட்டார்கள். அவர் சொன்ன விலைக்கே நான் பொருட்களை கொடுத்தேன். என்னை ஏமாற்றிய சந்தோஷத்தில் அவர்களும் சென்றார்கள்.

எனக்கு என்னவோ நான் எனக்கே பணம் கொடுத்தது போல் ஒரு அனுபவம் உண்டானது.

தூரத்தில் நடந்து மறைகின்ற அவர்களை பார்த்து நான் சொன்னேன்தத்துவமசி(அது நீ ஆகிறாய்….. என்று)
                                   *********
Hi Friends, I have A REQUEST.  ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 25 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android story App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்.

 
https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason