Thursday, December 1, 2016

மந்தாகினி


எங்கள் கல்லூரியின் ஆண்டு விழாவின் பெயர் தான் “சில்சிலா”. மூன்று நாட்கள் கேம்பஸ் முழுவதும் விழாக்கோலம் பூண்டு ஒரே கலகலப்பாக இருக்கும். வேறு பல கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் வருவார்கள் நிகழ்ச்சி நிரலைக் காண்பதர்க்கும் சிலர் பங்குகொள்வதற்கும்.

மாணவர்களுக்கு நாலு காசு சம்பதிபதர்க்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இருந்தது இது.  விழா நாட்களில் உணவு மற்றும் விளையாட்டு ஸ்டால்கள் வரிவரியாய் உயரும். எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே ஸ்டால்கலை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டன. 

இப்படி ஒரு சந்தர்பத்தில் தான் ஒரு புத்திசாலி ஸ்டால் போட்டான். பத்து நயா பைசாவின்  செலவுகூட இல்லை அதற்கு. அவனிடம் ஒரு மைக்கு செட்டும் காதல் பாடல்கள் அடங்கிய டேப் ரிக்கார்டரும் மட்டும்  இருக்கும்.

யாருக்கு வேண்டுமானாலும் சென்று பாடல் சமர்பிக்கலாம் (சோங் டெடிக்கேஷன்). ஐந்து ரூபாய் மட்டும். இதில் முக்கிய ஈர்ப்பு என்னவென்றால் பாடல் லவ்டு ஸ்பீக்கரில் பாடுவதற்கு முன்பாக அவனுடைய சார்பில் ஒரு  ஸ்பெஷல் அன்னௌன்செமென்ட் கேம்பஸ் முழுவதும் உரக்க எதிரொலிக்கும். அது கிட்டதட்ட இப்படி இருக்கும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிராஞ்சின் சுரசுந்தரி... மூன்றாவது செம்மிலே ஜின்சிக்கு.., ஓராயிரம் நேசப் பூச்செண்டுகள் நல்கி கொண்டு சோங் டெடிக்கேட் செய்வது,  ஐந்தாவது செம்மிலே உஸ்மான்.”

தொடர்ந்து ‘டர்ர்’ என்ற ஹிந்தி சினிமா பாடல் உச்சதிதில் கேட்கும்.

ஜாதூ....தேறி நஸ்ர்....”

கேம்பஸில் தோழிகளுடன் நிகழ்ச்சிகளை மகிழ்ந்து கொண்டிருக்கும் ஜின்சி இதை கேட்டு மனதில் எல்லையில்லா ஆனந்தம் கொள்வாள்.  இருந்தாலும்

ச்சே இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா..” என்று பொய் கோபம்  நடிப்பாள்.

எப்படியோ அவனுடைய சோங் டெடிக்கேஷன் நிகழ்ச்சி காலேஜில் பெரிய ஹிட் ஆனது. மாணவர்கள் பாடல் சமர்ப்பிக்க கியூவில்  காத்து நிற்க தொடங்கினர்.

இனி கதையின் நாயகியை அறிமுகமாக்கிக் கொள்வோம். அவள் பெயர் “மந்தாகினி”. நல்ல பணக்கார வீட்டுப் பெண்.

பாசிடிவான விஷயங்கள் சொல்வதானால் மந்தாகினியின் முகம் பரவாயில்லை. பணக்காரி என்ற தலைகனமும் இல்லை. ஆனால் ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட், என்னவென்றால் அவளது அபாரமான எடை. இதே காரணத்தால் கல்லூரியில் எல்லாவருக்கும் மந்தாகினியை நன்றாக தெரியும் .

உண்மையில் தனுடைய தேகம் போலவே ஒரு மிகப்பெரிய மனதின் உடைமையாகவும் இருந்தாள் மந்தாகினி . யார் வந்து கடன் கேட்டாலும் பணம் கொடுத்து உதவுவாள். கடனை திருப்பி வாங்குவதில் பெரிய கண்டிப்பு ஒன்றும் இல்லை. இதன்மூலம் காலேஜின் பையன்கள் அனைவரும் அவளிடம் கடனாளி ஆனார்கள். ஜென்மத்தில் திருப்பி கொடுக்கும்  பழக்கம் இல்லை ஒருவருக்கும்.

இனி கதைக்கு திரும்ப வருவோம். அப்படி தன் தோழிகளுக்கெல்லாம் அடிக்கடி இவ்வாறு சாங் டெடிக்கேஷனுகள் கிடைத்து கொண்டிருந்த போது,  பாவம்  நம்முடைய மந்தாகினிக்கும் மனதில் ஒரு ஆசை வந்தது.  தன் பெயரிலும் யாராவது ஒரு சோங் டெடிக்கேட் செய்ய வேண்டும், பிறகு, அந்த டெடிக்கேஷன் கேம்பஸ் முழுவதும் அலைஅடிக்க வேண்டும்.

அதற்கு என்ன வழி என்று யோசித்து கொண்டே அவள் நடக்கும் போது தான் அவளுடைய வழக்கமான ஒரு கடனாளி எதிரே வருவதை அவள் பார்த்தாள். மந்தாகினியை கண்டதும் பையன் சந்தோஷத்தான். அவன் உடனடி அருகில் வந்து கேட்டான்.

மந்தாகினி, ஒரு இருபது ரூபாய் இருந்தா கொடேன்.. அடுத்த வாரம் தரேன்....”

ரூபாய் எல்லாம் தரேன். நீ எனக்கு ஒரு  உதவி செய்யனும்” மந்தாகினி சொன்னாள்.

ஆனால் விஷயம் கேட்ட பையனின் கண்கள் தள்ளியது. விபத்தை முன்னில் கண்ட அவன் விஷயத்தை எளிதாக்க முயன்றான்.

ஹேய், இதிலெல்லாம் என்ன இருக்கு மந்தாகினி... நீ சும்மா....”

ஆனால் அவள் அதை விடுவதாக இல்லை.

அதெல்லாம் சொன்னால் முடியாது. என்னுடைய எல்லா ப்ரெண்ட்ஸ்க்கும்  இப்பவே எட்டு பத்து டெடிக்கேஷன் ஆச்சு, எனக்கு ஒன்னாவது வேணும்...” அவள் அடம்பிடித்தாள்.

ஆனால் பையன் மீண்டும்  நழுவ முயன்றான். அவள் அத்தோடு தன் கடைசி தந்திரத்தை உபயோகித்தாள். 

உன்னால் முடியாது என்றால் நீ இதுவரை வாங்கிய நூத்தியம்பது ரூபாயும் இப்பவே திருப்பி கொடு..”

இனி என்ன செய்வது...அவளிடமிருந்து பணத்தையும் வாங்கி ஸ்டாலுக்கு நடக்கையில் மந்தகினியை கண்ட நிமிஷத்தை அவன் சபித்தான்.

இனி இன்று ஹோஸ்டலுக்கு திரும்ப ஏற  முடியுமா ... என்ன? இவளுக்கு டெடிக்கேஷன் செய்தேன் என்று தெரிந்தால்  வருஷம் முழுக்க  பசங்க கேலி செய்தே கொல்லுவாங்க.

இதிலேயிருந்து எப்படி தப்பிக்கலாம்....  அவன் தலை கொடைந்து யோசித்தான்.  திடிரென்று ஒரு ஐடியா கிடைத்தது. மந்தாகினியை மென்ஸ் ஹோஸ்டேலில் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள் என்று எழுதி கொடுப்போம். அதோடு அவளுக்கு டெடிக்கேஷனும் ஆச்சு,  நாமும் இதிலிருந்து நழுவி விடலாம்,  தப்பிச்சோம்டா சாமி.., அவன் மனதில் எண்ணினான்.

ஸ்டாலில் சென்ற பிறகு இதே போன்று சீட்டில் எழுதி கொடுத்தான்.

மாணவி :-  மந்தாகினி

நேசிப்பவர் :- மென்ஸ் ஹோஸ்டலின் அனைத்து  மாணவர்களும்.

பையன் புக் செய்து வெளியில் வந்து மந்தாகினிக்கு சிக்னல் கொடுத்தான். “எல்லாம் ஓ.கே..., தாமதமின்றி வரும்.” மந்தாகினியும் சந்தோஷமாக தன் தோழிகளின் இடையில் சென்றாள்.

ஒரு வழியாக காத்திருந்த மந்தாகினியின் சீட்டின் முறை வந்தது. சீட்டை வாசித்தவனுக்கு நம்பவே முடியவில்லை. சான்சே இல்லை..! சூரியன் மேற்கே உதிக்குமா என்ன...? இது கண்டிப்பாக நேர் எதிர்மாறாக இருக்க தான்  வாய்ப்பிருக்கிறது என்று அவன் நினைத்தான். 

அது மட்டுமல்ல, இப்படி அவன் ப்ளே செய்தால் தனக்கு ஹோஸ்டேலில் இருந்து கிடைக்க போகும் மொத்த அடியை கூட மனதில் கண்டவுடன் அவனுடைய புத்திக்கு தெளிவு வந்தது. உடனடியாக  தன்  தொண்டையை  சரி செய்து கொண்டு அவன் அனௌன்ஸ் செய்ய  ஆரம்பித்தான்.

டிசெம்பர் மாதத்தின் நடுக்கும் குளிரில், இரவு வேளையில் உறக்கமின்றி இருக்கும் மந்தாகினி ஹோஸ்டேலின் அனைத்து மாணவர்களையும் நினைத்து பாடும் பாடல் இதோ...”

தில் தக் தக் கர்னே லகா...”

வெகுதூரத்தில் தன் தேகத்தின் ஒவ்வொரு அனுவும் மெய்சிலிர்க்க காத்திருந்த மந்தாகினி அனௌன்ஸ்மென்ட்டும் அது முடிந்து வந்த பாடலையும் கேட்டு தோழிகளுக்கிடையில்  தலை சுற்றி விழுந்தாள்.

பின்குறிப்பு:-

எப்படி இருந்தாலும் பெண் மனதில் வருத்தம் இருக்குமல்லவா. அம்முறை செமெஸ்டர் விடுமுறைகளில் நினைத்தது போலவே மந்தாகினி பட்டினி கிடந்தும், மாரத்தோன் ஓடியும் தன்னுடைய எடையை பாதியாக குறைத்தாள். அதற்கு பிறகும் கோர்ஸ் முடிவதற்குள் அனைவரும் பார்க்க விரும்பும் ஒரு அழகியாகவே அவள் மாறி விட்டாள்.

மந்தாகினி இப்பொழுது எங்கே இருக்கிறாளோ ...?

ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 22 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்.

https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason

No comments:

Post a Comment