Friday, December 23, 2016

பிரெண்ட்ஸ் ஒப் சினிமா நடிகை

என்னுடைய பேச்சுலர் வாழ்க்கை காலத்தில் தமிழ் சினிமாவின் ஒரு யுவ நடிகையின்  தீவிர ரசிகனாக நான் இருந்தேன். அந்த சமயத்தில் சென்னையின் பிரபலாமான காலேஜில் படித்து கொண்டிருந்தார் அந்த நடிகை

என்னுடைய நண்பர்களுக்கெல்லாம் இந்த நடிகை மீதுள்ள என்னுடைய ஆராதனை குறித்து தெரியும், அப்படி இருக்கும் போது தான் ஒரு நெருங்கிய நண்பன் ரூமில் வந்து என்னிடம் சொல்கிறான்...,

“டேய், நானொரு விஷயம் சொல்வேன், சொன்னால் நீ நம்ப மாட்டாய்...”

“சொல்லு என்ன விஷயம்..?”

“உன்னுடைய அந்த சினிமா நடிகை இருக்கா...ள [பெயர்], அவளுடைய இரண்டு பிரெண்டுஸ் நேற்றைக்கு பெங்களூரில் வந்திருந்தார்கள்....”

“அதுக்கு..?” நான் கேட்டேன்.

“ஆம், இனி தான் நீ அதிர்ச்சி அடைய போற, இந்த இரண்டு தோழிகளையும் கூட்டி கொண்டு நான் நேற்றைக்கு பப்-யில் போனேன்..”

“போடா...”

இவன் லூசுதனமா ஏதோ உளறுகிறான் என்று தான் நான் சந்தேங்கப்பட்டேன். ஆனால் சம்பவம் உண்மையாக தான் இருந்தது. அதை அறிந்து நான் தளர்ந்து போனேன்.

இனி அந்த குறிப்பிட்ட சம்பவத்தை விவரிக்கிறேன். அதே ஆண்டில் அந்த காலேஜ்லிருந்து பெங்களூருக்கு தான் ஸ்டடி டூர்/ எக்ஸ்கர்ஷன் ப்ளான் செய்தது. நம்முடைய நாயகி ஷூட்டிங் காரணமாக இருக்கலாம் இந்த டூரில் இல்லை. ஆனால் இந்த டிரிப்பில் இருந்த அவளுடைய இரண்டு நெருங்கிய தோழிகளுக்கு வாழ்வில் ஒரு முறையாவது பெங்களூரிலே பப்களில் செல்ல வேண்டும் என்ற அப்பட்டமான விருப்பமிருந்தது.

(இன்று இந்தியாவிலே மிக்க நகரங்களும் நியூ ஜெனரேஷன் விஷயத்தில் ரொம்பவே முன்னேறி உள்ளது, ஆனால் அன்று பெங்களூரில் தான் பப் கலாச்சாரத்தின் தலைநகரமாக இருந்தது தென் இந்தியாவில்.)

அப்போது இவர்களில் ஒருத்திக்கு என்னுடைய நண்பனின் கம்பெனியில் வேலை செய்கின்ற ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருடன் சின்னதாக ஒரு லைன் இருந்தது. அவள் இதை பற்றி அவனிடம் நினைவு படுத்திஇருந்தாள், அதற்கு அவன் முயற்சிப்பதாகவும் சொல்லியிருந்தான். அவன் பார்த்த போது அவனுக்கு தெரிந்தவர்களில் கார் உள்ளவனும் இந்த விஷயமெல்லாம் சொல்லக்கூடியவனாக என்னுடைய இந்த நண்பனை மட்டுமே அவனுக்கு கிடைத்தான். அவன் உடனே என் நண்பனிடம் ஒரு டீல் வைத்தான். அதாவது அவன் அவனுடைய லவ்வரிடம் காதல் செய்யும் போது இரண்டாவது பெண்னுடன் நண்பன் லைன் அடிக்கலாம்.

அப்படி அவர்கள் சம்பவத்தை பிளான் செய்தனர். பெங்களூரில் வந்து சேர்ந்தவுடன் சங்கத்தில் இருந்து இரண்டு – இரண்டரை மணி நேரத்திற்கு ஆண்டியை பார்பதற்காக என்றோ அல்லது அது போன்றோ சொல்லி அங்கிருந்து நழுவுவதற்கான பெர்மிஷனை இந்த பெண் உண்டாக்கி எடுத்து வைத்திருக்கிறாள். இந்த நேரத்திற்குள் அவர்களை பிக்கு செய்து பப்பில் ஏற்றி திரும்ப கொண்டு போய் விட வேண்டும் என்பது தான் டாஸ்க்.

ஏதானாலும் இந்த பொறுப்பை எல்லாம் வெற்றிகரமாக பூர்த்தி செய்த பிறகு தான் இவன் நம் முன்பில் வந்து நின்று சிரிப்பது.

“முதல்ல அந்த பெண்களுக்கு கொஞ்சம் அங்கலாப்பு இருந்தது, பிறகு ஒரு பியர் ஷேர் செய்து குடித்தனர். அதற்கு அப்புறம் தான் நல்ல ஜாலியாக இருந்தது அவர்களுடன் பேசி பழகுவதற்கு..”

அவனுடைய வர்ணனையை கேட்டு நான் கூடுதல் டெஸ்ப்பானேன். இல்லாவிட்டாலும் கொஞ்சம் குடித்த பிறகு பெண்கள் அவர்களுடைய சகஜமான சுபாவத்திலிருந்து மாறி கொஞ்சம் பிட்ச்னஸாயி பேசுவார்கள் என்று நான் கேட்டிருக்கிறேன். அப்படி என்றால் எவ்வளவு ஜாலியாக இருக்கும் அந்த சமயம். அதும் சினிமா நடிகையின் நெருங்கிய தோழிகளுடன். மொத்தத்தில் கட்டுப்பாட்டை மீறிய நான் நண்பனிடம் கடுமையாக பரிபவித்தேன்.

“உனக்கு என்னையும் கூட கூப்பிட்டிருக்கலாம் இல்ல, நான் எதிர் டேபிளில் ஆவது உட்கார்ந்திருப்பேனே.”

“அது எப்படி டா, நீயே சொல்லு. நானே அவன் கூப்பிட்டு போனேன்” நண்பன் தன்னுடைய இயலாமையை தெளிவாக்கினான்.

“இனியும் வருவாங்களா அவங்க..?” நான் கேட்டேன்.

“அப்படி தான் நினைக்கிறேன். இந்த முறை வேற பாட்ச்சில் உள்ளவர்களும் பெங்களூருக்கு தான் டூர் வேணும்னு கேட்டிருக்கிறார்களாம். “

“அப்படின்னா அடுத்த முறை நீ என்னையும் கூப்பிடனும்...” நான் முன்கூட்டியே சொல்லி வைத்தேன்.

“சரி” என்று அவனும் சம்மதித்தான்.

ஆனால் அந்த சம்மதத்தில் எந்த ஒரு உறுதியும் இல்லாதது போல் எனக்கு தோணியது. அடுத்த முறை என்னை கூப்பிடுவது போயிட்டு இந்த விஷயத்தை குறித்து அவன் சொல்ல கூட போறதில்லை. இனி வேற என்ன தான் இதற்கு ஒரு வழி..? நண்பன் போன பிறகு நான் தலைகொடைந்து அடிமுடி ஆலோசிக்க தொடங்கினேன். கடைசியில் இரவில் நான் அந்த பெண்களின் பெயரில் காலேஜிற்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று தீருமானித்தேன். உள்ளடக்கம் ஏறத்தாழ இப்படியாக இருந்தது.

To

X, Y

பிரெண்ட்ஸ் ஒப் சினிமா நடிகை,

பிரபல காலேஜ், சென்னை

பிரியமுள்ள X, Y என்கிறவங்க தெரிந்து கொள்வதற்கு,

        நீங்கள் சென்ற வாரம் பெங்களூருக்கு எக்ஸ்கர்ஷன் வந்திருந்த போது டூரின் இடையில் என்னுடைய நண்பர்களுடன் பப் விஜயம் செய்ததும், பியர் குடிச்சதும் எல்லாம் அவர்கள் சொல்லி தெரிந்து கொண்டேன். உண்மையில் அன்று உங்களுடன் சேர முடியாத ஒரு துரதிஷ்டசாலி தான் நான்.

     ஆனால் பரவாயில்லை. இனியும் பெங்களூருக்கு உங்களுடைய பிரெண்ட்ஸ் ஸ்டடி டூருக்கு வருகிறார்கள் என்று சொன்னீர்களே, அது பிரகாரம் இனி வருகின்ற பாட்ச்களிலே எந்த பெண்களுக்காவது பப்கள் பார்பதற்கோ, பியர் குடிப்பதற்கோ மும்முரமான ஆசை இருக்கு எனில் சிறிதும் தயங்காமல் என்னை காண்டாக்ட் செய்ய கோரிக்கை விடுகிறேன். மிகுந்த ஜாக்கிரதையுடன் உங்களை திரும்ப சேர்ப்பேன் என்ற உறுதி நல்கி கொண்டு நான் நிறுத்துகிறேன்.

“ஸ்ரீ ராம ஜெயம்”

என்னை காண்டாக்ட் செய்ய வேண்டிய எண்/ இமெயில்

போன் :  .............

மெயில் : ............

விசுவாசத்துடன்,

(பெயர்)

கையொப்பம்

காலையிலேயே இந்த கடிதத்தை போஸ்ட் செய்ததும் மனதிற்கு சிறியதாக ஒரு ஆசுவாசமானது. எதுவானாலும் நாம செய்ய வேண்டியதை செய்தாச்சு. பிறகு நான் அதை குறித்து மறந்தே போனேன்.

நான்கு – ஐந்து நாள் முடிந்திருக்கும் கம்பெனியில் இருக்கும் போது நண்பனின் போன் வந்தது. எடுத்த போதே அவன் கெட்ட வார்த்தைகளால் கடிந்து கொண்டான், அதை கேட்டு என்னுடைய  செவிகள் புளித்து போயின.
“என்னடா ..?” நான்  பதற்றத்துடன் கேட்டேன்.

“டேய் ------------, நீ அந்த காலேஜுக்கு கடிதம் எழுதினியா..., எக்ஸ்கர்ஷன் வறுகின்ற பெண்களை பப் காண்பிக்க நீ தயாராக இருக்கிறேன் சொல்லி...?”

“ஆமாம், ஒரு துர்பல நிமிஷத்தில் நான் அப்படி எழுதிவிட்டேன், என்னடா பிரச்சனை...?”

“பிரச்சனை..., இனி ஒன்னும் உண்டாக பாக்கி இல்லை. உன்னுடைய பிரெண்ட்ஸ் ஒப் சினிமா நடிகை அட்ரஸ் பார்த்த உடனே அங்கெ உள்ள பெண்கள் எல்லாம் கடிதத்தை திறந்து படிச்சுட்டாங்க. இந்த பெண்கள் பப்பில் வந்து பியர் குடிச்சது எல்லாம் அங்கெ மொத்தம் டமாரமா பரவியாச்சு. ஆசிரியர்களை மட்டும் நம்பி பெண்களை டூருக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு இது சகிக்குமா, அவங்க காலேஜுக்கு வந்து ஒரே பிரச்சனை பண்ணியிருக்காங்க. ஆசிரியரிகள் இப்போ அங்கெ அச்சடக்க நடவடிக்கை நேரிட்டு கொண்டிருக்கிறாங்க, இந்த பெண்களுக்கோ சஸ்பென்ஷனும்.”

ஒரு நிமிடம் நிறுத்தி அவன் தொடர்ந்தான்...

“அது போததுனு, இங்கே ஒருத்தன் அவனுடைய லைன் உடைந்த வருத்தத்தில் என்ன கூப்பிடுகிற கெட்ட வார்த்தைகள் காலையிலிருந்து என்னுடைய இந்த இரண்டு காதுகளும் மாத்தி மாத்தி கேட்டுகிட்டிருக்கிறேன்...  நீ தற்காலம் கொஞ்சம் இடத்தை மாத்திக்கோ, உன்னை அவன் கம்பெனியில் வந்து அடிக்கனும்னு தான் சொல்றான். நான் அங்கெ வரல, வந்தால் நானும் உன்னை அடிச்சு போயிடுவேன், அதனால தான்..”

அவன் போனை வைத்தான்.

அய்யோ, இவ்வளவு பிரச்சனை நான் நிஜமா நினைச்சு கூட பார்க்கவில்லை. மற்றவன் கம்பெனியில் வந்து நம்பளை அடித்தால் மொத்தத்தில் நாறிடும், மட்டுமில்ல நியாயம் அவனுடைய பக்கமும் தான். நான் அதனால் ஒரு அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு ரூமில் போயி இருந்தேன்.

சாயங்காலம் ஆனபோது வெளியில் என்னுடைய நண்பனின் புல்லட் சப்தம் கேட்டேன், ஆபாச வார்த்தைகளை கேட்டு காது பழுத்து வருகின்ற வழி இது, இனி இவன் ஒரு வேளை நம்பளை ....நான் சந்தேகித்தேன், நான் அவனை தூரத்திலிருந்து பார்த்த போதே இன்று கபாலீசுவரன் சொன்ன டயலாக்கை நான் அன்றே சொன்னேன்.

“மகிழ்ச்சி...”

ஆனால் பல பேருக்கு ஒரேயடியாக மகிழ்ச்சி கொடுத்த என்னை பார்த்து அவன் சிரிக்க மட்டுமே செய்தான்...
                                        ****************

Hi Friends, I have written 20 similar funny stories and made it as a free android app. If you like this story please download the app from google store . Click the below app Link to install from the store. 

 
https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason



.

No comments:

Post a Comment