Wednesday, December 14, 2016

ஆங்கிலம் இலக்கணமும் நானும்


பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு மிகவும் கடினமான விஷயம் ஆங்கிலமும், ஆங்கில இலக்கணமும் தான். ஆனால் இப்பொழுது நிலைமை எதிர் மாறாகிவிட்டது, ஆங்கிலதினால் எனக்கு இல்லை கஷ்டப்பாடு, பாக்கி உள்ளவர்களுக்கு தான்.

என்னை பொருத்த வரையில் இந்த மொழியுடைய ஒரு முக்கியமான குறை என்னவென்றால் அதை உபயோகபடுத்தும் போது நல்ல சொல்லகராதி மட்டும் இருந்தால் போதாது அதன் உச்சாரண முறையும் கைதேர்ந்து இருக்க வேண்டும். உச்சரிப்பு சரியில்லை எனில் சுற்றியுள்ளவர்கள் நமக்கு மொழியை பற்றிய அறிவின் மதிப்பை கொடுக்க மாட்டார்கள்.

நான் மேல் சொன்னது போல் இந்த மொழியை பேசும் போது மட்டுமல்ல கற்றுகொள்ளும் போதும் சிறிதல்ல மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். அதனால் நான் ஸ்கூல் படிக்கும் போது  என் வீட்டின் அருகில் உள்ள ‘சுப்ரமணியன் வாத்தியார்” என்றவரிடம் ஆங்கிலேயம் டியூஷன் கிளாஸ்க்கு சென்றேன்.

இவருடைய கற்பிக்கும் முறை சற்று வித்தியாசமானது. சாதரணமாக அவர் வகுப்பில் அதிகம்  பேச மாட்டார். அவர் வந்தவுடன் மாணவர்கள் அனைவருக்கும் ஒரு ஆங்கில இலக்கண வினாத்தாள் விநியோகம் செய்வார். எல்லா தாளிலும் ‘பாஸ்ட் கண்டினுயஸ்”, “ப்யுச்சர் பெர்பெக்ட் கண்டினுயஸ்” போன்று வாயில் ந்ழையாத படிக்கான காலங்கள் இருக்கும்.

மாணவர்கள் அவரவர்க்கு தோன்றியது போல் பதில் எழுதி முடித்ததும் ஆசிரியர் சரியான பதில்களை உரக்க சொல்வார். அவ்வளவு தான்.

மாணவர்களுக்கு அது புரிகிறதோ இல்லையோ என்பதை பற்றி அவருக்கு கவலை இல்லை. என்றும் சிம்பிள் இங்கிலீஷின் பிரதிநிதியாக இருந்த எனக்கு இந்த டியூஷன் கொண்டு ஒரு பிரயோஜனமும் கிடைக்கவில்லை.
இப்படி எல்லாம் இருந்தாலும் நான் சுப்ரமணிய வாத்தியாரின் டியூஷன் கிளாஸ் செல்ல விரும்பினேன். முதலாவதாக கேள்வியின் பதில் தவறானாலும் ஆசிரியர் ஒன்றும் சொல்வதில்லை அதைவிட முக்கியம் ஆசிரியர் டியூஷன் பீஸ் ஒரு பொழுதும் கேட்டு வாங்குவதில்லை.

அந்த வாய்ப்பை நான் நன்றாகவே பயன்படுத்த தொடங்கினேன். பணத்தின் தேவை காரணம் வீட்டிலிருந்து முறையாக தந்திருந்த டியூஷன் பீஸ்சை நான் ஓன்று இரண்டு முறை நண்பர்களுடன் மறித்து கொண்டேன். ஆசிரியர் கணக்கு வைபதில்லை என்பதனால் இதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தேன்.

“நிலா இருக்கு என்று நினைத்து உதயம் வரை திருட கூடாது. ” என்று ஒரு பழமொழி  இருக்கு.

எரிச்சலூட்டினால் சாரை பாம்பு கூட கடிக்கும் ” என்றும் ஒரு பழமொழி இருக்கு. என்னுடைய விஷயத்தில் இவ்விரு பழமொழிகளும் ஒன்று சேர்ந்தாற்போல் ஒரு நாள் வந்தது. அன்று ஆசிரியர் வழக்கத்திற்கு மாறாக டியூஷன் வகுப்பில் பேச ஆரம்பித்தார்.

 “பசங்களா நீங்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாக்கியம் கேட்டிருக்கிறிர்களா ? வினாத்தாளில் மல்லுகட்டி கொண்டிருந்த நான் “இது என்ன புதமை ” என்று நினைத்து செவி கூர்ப்பிதேன் . ஆசிரியர் தொடர்ந்தார்....

இவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள் என்பதை நினைவுபடுத்தும் வாக்கியம் இது. ஆனால் பெற்றோர்களையும் குருவையும் ஒன்று சேர்த்து ஏமாற்றும் சிலர் இருக்கின்றனர்....  இதோ இவனை போல்..” கடைசி வாக்கியம் சொல்லி முடித்ததும் என்னை நோக்கி விரல் கொண்டு சுட்டி காண்பித்ததும் ஒரே நேரத்தில் தான்.

தர்மசங்கிடத்தில் ஒன்று நெளிய கூட முடியாமல் அந்த டியூஷன் வகுப்பில் நான் மரத்தே போயிவிட்டேன். முன் பெஞ்சில் இருந்த கொலுசுகள் வாய்விட்டு சிரித்தன. முக்காலியில் கட்டி போட்டு அடித்திருக்கலாமே ஆசிரியரே... இதைவிட மேல் !

மானத்திற்கு மிகுந்த அவதூறு சம்பவ்த்ததினால் அதிக காலம்  என்னால் அந்த டியூஷன் கிளாஸ் தொடர முடியவில்லை. பத்தாவது வகுப்பிலே ஆங்கில பாடம் எல்லாம் நான் மனப்பாடம் செய்தே பாசானேன்.

அது போகட்டும், இந்த அவமானத்திற்கு காரணமாவது என்னுடைய செயல் என்று வைப்போம், நம்முடைய  ஆங்கில விவரம்  பொதுமக்கள் முன்பாக வெளிவந்த வேறொரு சம்பவம்  கூட இருக்கு.

பத்தாம் கிளாஸ் முடித்து பி.யு. காலேஜ் குமாரனாக ஆவதற்கு காத்திருந்த காலம். எல்லா ஹோட்டல்களிலும் ஏறி வயிற்றை நிரப்பும் பழக்கமிருந்த காரணத்தினால் வயிற்று வலி என்றும் எனக்கு  ஒரு சகஜமான விருந்தாளியாக இருந்தது. வலி நிரந்தரம் ஆனதும் டாக்டரை காண்பித்து விடலாம் என்று தீர்மானித்தேன்.

டாக்டர் வீட்டில் தான் வைத்தியம்  பார்க்கிறார். என்னுடைய இந்த தரிசனத்தின் பின்னில் இரண்டு உத்தேசங்கள் உள்ளன. வைத்தியரையும் பார்க்கலாம், முடிந்தால் அவரது இளைய மகளையும் பார்க்கலாம். கண்களுக்கு ஒரு குளிர்ச்சி அவ்வளவு தான்.

நான் நன்றாக டிரஸ் செய்து டாக்டரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்,  ஹாலில் சுற்றி பார்த்தேன்.

ம்ஹும்...என் ஆள் இல்லை. சரி வந்த வேலையாவது நடக்கட்டும் என்று நினைத்து டாக்டரின் ரூமில் சென்று அமர்ந்தேன்.

 பரிசோதித்தபின் டாக்டர் சொன்னார், “ ஸ்டூல் டெஸ்ட் நடத்தனும், நாளைக்கு நீ ஸ்டூல் கொண்டு வரனும். ”

எனக்கு ஒரே பதற்றும். வயிற்று வலிக்கும் ஸ்டூலுக்கும் என்ன சம்பந்தம்..? இனி இப்போ ஸ்டூல் மேல் ஏறி நிக்கணுமோ என்னவோ..? அதுக்கு நான் ஏன் தூக்கி எடுத்து கொண்டு வரணும்...? மனதில் குழப்பம் அடைந்த நான், “ வீட்டில் ஸ்டூல் இல்லை டாக்டர்...”

டாக்டர்: “ இன்னைக்கு வேண்டாம்டா...நாளைக்கு போதும்.!”

“ஏன் டாக்டர், இங்கே ஸ்டூல் இல்லையா...?” நான் அப்பாவியாக கேட்டேன்.

டாக்டரூக்கு ரொம்ப கோபம் வந்தது. “இங்கேயுள்ளது கொண்டு என்ன செய்ய...? நீ நாளைக்கு கொண்டு வரியா இல்லையா...?”

நான்: “ அதுக்கில்ல..,  ஸ்டூலுடைய ஒரு கால் ஒடிந்து இருக்கு;    நாற்காலி போதுமா..?”

அப்புறம் நான் பார்க்கும் போது டாக்டர் விழ்ந்து விழுந்து சிரித்து கொண்டு இருக்கிறார். விஷயம் தெரிந்த போது எனக்கு அங்கே இருந்து தப்பித்தால் போதும் என்றாகிவிட்டது.

இனி இந்த  மனுஷன் இதை எல்லாம் வீட்டில் டமாரம் அடித்தால், எப்படி நான் இனி அந்த பெண் முகத்தில் முழிப்பேன் என்பது தான் திரும்பி நடக்கையில் என்னுடைய ஒரே யோசனை.

                                 ************
Hi Friends, I have A REQUEST.  ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 25 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android story App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்.

https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason






No comments:

Post a Comment