Thursday, December 22, 2016

சல்சா

சாதாரணமாக எனக்கு பெண்களிடம் பேசுவது என்பது அவ்வளவு பெரிய பிரச்சனை உள்ள விஷயம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் நமக்கு பிடித்த ஒரு பெண் குறுக்குசந்தில் எதிரே வரும் போது என்னுடைய இதய துடிப்பு அதிகரிக்கும், குரல் பதற்றம் அடைய தொடங்கும்.

இது என்னை நிரந்திரமாக அலட்ட தொடங்கிய போது நான் எங்களுடைய பகுதியில் உள்ள ஒரு கில்லாடியின் உதவியை நாடினேன். பிறகு அவனிடம் பணிவாக கோரினேன்,

“என்னை உங்கள் சிஷ்யனாக ஏத்துக்கனும், இந்த பெண்களை வசிகரிக்கும் முறையை எனக்கு கொஞ்சம் சொல்லி தரனும்.”

அவன் மிகவும் எளிதானது போல் சொன்னான். “டேய், இதெல்லாம் அவ்வளவு கஷ்டமான விஷயம் ஒன்றும் இல்லை. நீ நேராக போய் அந்த பெண்ணிடம் “செல்லம்” என்ற கூப்பிட்டு பேச தொடங்கு.”

‘செல்லமா’ அதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல என்னவோ நாவல், கதைகள் எல்லாம் இருக்கிற மாதிரி. நான் சந்தேகத்துடன் நின்றேன்.

“பின்ன காலை முதல் மாலை வரை குமுதம், குங்குமம் கதைகள் படிச்சுகிட்டு இருக்கிற இவங்கள வேற என்னனு கூப்பிட...? ஒரு வேலை செய், நீ கொஞ்ச நேரம் என் கூட உட்காரு...” அவன் அழைத்தான்.

அப்படி நாங்கள் இருவரும் குறுக்குசந்தில் இருக்கின்ற ஒரு சுற்றுச் சவர்மீது ஏறி அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்திற்கு பிறகு, ஒரு பெண் அந்த வழியாக வந்தாள். அவள் அருகில் வந்த போது இவன், “என்ன செல்லம், நம்பளை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கிறயே இப்போ...” என்று கேட்டான். நிஜம்..!, அந்த பெண் கொஞ்சம் வெட்கப்பட்டாள், பிறகு எங்களை கடந்து சென்றாள்.

நான் ஒப்புக்கொண்டேன். இது ஒரு திறமை தான். என்ன சொல்கிறோம் என்பதில் இல்லை விஷயம், எப்படி சொல்கிறோம் என்பதில் தான். சொல்ல நினைத்ததை சொல்ல வேண்டியது போல் சொன்னால் பெண்களை கவர முடியும் என்பது எனக்கு உறுதியானது. ஆனால் என்ன செய்ய, என்னால் இப்படி எல்லாம் ஹெட் செய்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஒருநாளும் இருந்ததில்லை.

சிறிது காலங்களுக்கு பிறகு நான் பெங்களூரில் வந்து சேர்ந்த போதும் இதே பிரச்சனை என்னை விடாமல் பின்தொடர்ந்தது. ஆனால் அதற்குள் யாஹூ மெஸ்சென்ஜெர், MIRC என்பது போன்ற சாட் அப்பிளிக்கேஷன்கள் உதவிக்கு வந்திருந்தது. காரணம் இவை இருக்கும் போது முதலில் நேடியாக பேச வேண்டியதில்லையே. இருந்தாலும் பெரும்பாலான சாட் பெண்களை நேரடியாக பார்க்க போகின்ற ஒவ்வொரு முறையும் ஒரு பேரிடராகவே முடிந்தது.

பார்க்க அழகான ஒரு பெண்னிற்கு சாட் ரூமில் அடையிருக்க வேண்டிய தேவையில்லையே என்ற எளிமையான உண்மையை நான் மறந்திருந்தேன். இருப்பினும் எதிர்பார்ப்பை கைவிடாமல் நான் என்னுடைய முயற்ச்சியை தொடர்ந்து கொண்டே இருந்தேன்.

கிட்டதட்ட சமமான முறையிலேயே இறை பிடிப்பதற்கு முயற்சிக்கின்ற ஒருவனையே எனக்கு ரூம்மேட்டாக கிடைத்தான். அவன் ஒரு முறை என்னிடம் சொன்னான்,

“டேய், இந்த சாட்டிங் கொண்டு மட்டும் காரியமில்லை. என் கையில் மற்றொரு ஐடியா கூட இருக்கு. ஆனால் சொஞ்சம் துட்டு இறக்கணும். “

அன்று வேலையில் பிரவேசித்து இருந்ததினால் பணம் ஒரு பிரச்சனையாக இல்லை எங்களுக்கு.

“இறக்கலாம், ஐடியா என்ன...”

அவன் நாடகியமாக சொன்னான்.

“சல்சா....”

“சல்சாவா...”

“ஆமாம்” அவன் தொடர்ந்தான்...

“அதாவது இந்த ஆண்ணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து நின்று டான்ஸ் செய்கின்ற ஒரு மெக்சிகேன் கலைவடிவம்  தான்  இந்த சல்சா..,

நாம எல்லாம் இப்படி சாட் செய்து நேரத்தை வீணாக்குவதை விட ஒரு பெண் நம்மிடம் வந்து டான்ஸ் செய்ய அழைப்பதை கொஞ்சம் யோசித்து பாரு...”

ஈஸ்வரா, நான் நமித்துக் கொண்டேன். நிகழ்ச்சி எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது. ஆனால் என்னால் அவனுடன் இனைந்து சேர முடியவில்லை. ப்ராஜெக்ட் ரிலீஸிங் தேதி நெருங்கியதன் காரணத்தால் வர்க் லோட் அதிகமாக இருந்தது கம்பெனியில். ஒன்று இரண்டு மாதங்களுக்கு கம்பெனியிலிருந்து வேலை முடித்து சீக்கிரம் இறங்குவது என்பது நடக்காத காரியம். அவனுக்கு என்றால் ஆபீஸின் அருகில் தான் இந்த டான்ஸ் சென்டர். அப்படி நான் கொஞ்சம் வெயிட் செய்தேன், மட்டுமல்ல அபிப்பிராயமும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா.

ஒன்று இரண்டு நாள் ஆகியிருக்கும், அவன் நல்ல சூப்பர் அபிப்பிராயம் தான் நல்கினான். நாட்கள் அதிகமாகும் தோறும் பெண்களுடன் அவன் வைக்கின்ற ஸ்டெப்களின் வர்ணனைகளை கேட்டு கேட்டு எனக்கு என்னோட கட்டுப்பாடு நஷ்டமாக தொடங்கியது. ஆனால் இதை கேட்டிருப்பதை தவிர வேறு வழி ஒன்றும் இல்லாத  ஒரு நிலைமையும்.

அப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் எனக்கு சீக்கிரம் வீட்டிற்கு வர முடிந்தது. அதற்குள் நண்பன் டான்ஸ் கிளாஸிற்கு சென்றிருந்தான். நானும்

 அப்போது ரூமிலிருந்த வேறொரு நண்பனும் சேர்ந்து சல்சா சென்டருக்கு போக தீருமானித்தோம்.

முதலில் நாங்கள் அங்கு சென்ற நண்பனை போனில் அழைக்கலாம் என்று நினைத்தோம், பிறகு அது வேண்டாம் என்று வைத்தோம். ஒரு சர்ப்ரைஸ் ஆகட்டும். அப்படி நாங்கள் டான்ஸ் சென்டரில் வந்தடைந்தோம்.

நாங்கள் புதியதாக சேர்ந்து கொள்ள வந்தவர்கள் என்று சொன்ன போது மா’னேஜர் எங்களை மனதார் வரவேற்று, பிறகு சல்சாவின் குணநலன்களை குறித்து விவரிக்க தொடங்கினார். அதற்கு பிறகு எங்களை டான்ஸ் ப்ளோருக்கு அழைத்து சென்றார்.

நான் பார்த்த போது ஒரு பதினைந்து பையன்களும் இரண்டு நூலு போல பெண்களும் அங்கெ இருந்தனர். இவ்வளவு கோம்படிஷன் என்றால் இங்கே வரவேண்டிய தேவை என்ன, ரோட்டில் நின்றால் போதுமே என்று நான் சிந்தித்தேன். அது மட்டுமில்லை, இந்த இரண்டு பெண்களும் சென்டரை சேர்ந்தவர்களோ என்ற சந்தேகமும் உண்டானது. நம்ம நண்பன் தினமும் சொல்கின்ற வர்ணனைபடி மனதில் செய்து வைத்த இமாஜினேஷன் இப்படி ஒன்றும் இருக்கவில்லை.

நான் மற்றொரு ரூமில் ஏற்றி பார்த்தேன். பெண்கள் மட்டும் பயிற்சி செய்கிறார்கள் அங்கெ. ஒரு லேடி இன்ச்டரக்டரும் இருந்தார். எனக்கு ஓரளவிற்கு அங்கு நடக்கின்ற நிகழ்சிகளின் செயல்முறைகள் புரிய தொடங்கியது. ஆனால் நம்முடைய மச்சானை மட்டும் இந்த கூட்டத்தில் எங்கும் காணவில்லை.

நான் விரிவாக உலவியபோது அதோ கூட்டத்திலிருந்து அகன்று தூரே டாய்லட்டின் அருகில் நின்று ஒருத்தன் டான்ஸின் சில கோஷ்டிகளை காண்பித்து கொண்டிருக்கிறான். அதிர்ஷ்டவசமாக அவன் எங்களை பார்க்கவில்லை. நான் நண்பனை சுட்டி காண்பித்து மானேஜரிடம் கேட்டேன்..

“இது என்ன அவன் மட்டும் தனியா நின்று டான்ஸ் செய்யறான்...?”

“அதுவா, அவன் நேற்றைக்கு தான் சேர்ந்திருக்கிறான். அதாவது இந்த சல்சாவின் பேசிக் ஸ்டேப்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் உடன் நிற்கின்ற பார்ட்னரின் காலில் மிதித்து கொண்டிருப்போம். அப்போ அது வரைக்கும் தனியா பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்.

நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்தோம். அப்போ கடைசி ஒரு மாத காலமா தனியா கதியில்லாம டான்ஸ் செய்து கொண்டிருக்கான் இவன். அப்புறம் ரூமில் வந்து சுத்தற ரீல் கேட்டா, இதோ சமீபத்தில் போன ஒரு நாள் கூட டான்ஸ் செய்த பெண்ணின் கழுத்தில் முத்தம் கொடுத்தது வரை ஆச்சு. நாங்கள் அப்போதே அந்த இடத்திலிருந்து ஸ்கூட்டாகினோம். நேரே ரூமிற்கு சென்று நிலத்தில் விரித்திருந்த படுக்கையில் காலை நீட்டிக் கொண்டு டி.வி. காண ஆரம்பித்தோம்.

சிறிது நேரத்திற்கு பிறகு என்னுடைய நண்பன் ப்ரேமம் சினிமாவில் உள்ள டான்ஸ் மாஸ்டரை போன்று சில ஸ்டேப்கள் போட்டுக் கொண்டு உள்ளே வந்தான். நாங்கள் கவனிக்காமல் இருந்த போது அவன் பேச தொடங்கினான்..

“ஏய் மச்சி, இன்னிக்கு என்னாச்சு தெரியுமா..? ஒரு பொன்னு சேர்ந்து நின்னு டான்ஸ் செய்திட்டு, ஹோ, அவளுடைய தலைமுடியுடைய ஒரு மணம் இருக்கே..தாங்க முடியலை..”

“அப்படின்னா நீ அவகிட்டே முடியை ஏதாவது பினாயில் போட்டு கழுவ சொல்லறது தானே, நாற்றம் போகும்.” நாங்கள் படுத்து கொண்டே சொன்னோம்.

அவன் சற்றே அதிர்ந்தான்.”யே..”

நான் தொடர்ந்தேன், “ டேய் துரோகி, நீயோ மாட்டிகிட்டே. இனி என்னோட பணத்தை கூட கொண்டு போய் தொலைக்கணும் தானே நீ இங்கே வந்து இவ்வளவெல்லாம் டிராமா செய்தது..”

அவன் படுக்கையில் முட்டிக்காலில் நின்று சொன்னான்,

“சத்தியம் டா, நான் மூனு மாசம் பீசை முதலேயே கொடுத்துட்டேன் ... “
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அங்கிட்டும் இங்கிட்டும் ஒருத்தருக்கு ஒருத்தர் கால்லை வாரி விட்டு கிட்டிருந்தாலும் அது நல்ல அற்புதமான ஒரு பேச்சுலர் காலம்.

அதிகம் தாமதமின்றி மீண்டும் நாங்கள் ஒன்று சேர்ந்து புதிய திட்டங்களை ஆலோசிக்க தொடங்கினோம். எப்படியாவது ஒரு இறையை (இனக்கிளியை) பெறுவது தான் எங்களின் அன்றைய குறிக்கோள். 

                                                                        *************
Hi Friends, I have A REQUEST.  ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 25 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android story App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்.

 
https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason






No comments:

Post a Comment