Friday, December 16, 2016

முதல் இன்டர்வியு


நான் தும்கூரில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்கின்ற காலம். அனைவரையும் போல் நானும் வேலையை குறித்து நினைக்க தொடங்கினேன்.


எங்களுடைய காலேஜில் கேம்பஸ் இன்டர்வியு என்ற ஏற்பாடு இல்லாததினாலும், இனி ஒரு வேளை இருந்திருந்தாலும் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த செகண்டு கிளாஸ் கம்பெனிகளுக்கு போதாததினாலும் நான் கேம்பஸ் இன்டர்வியுவிகளை வெருக்கவும், சுயமாக வேலை தேடி பிடிப்பதற்கு முடிவு எடுக்கவும் செய்தேன்.  

கம்முயுனிக்கேஷன் நெட்வொர்க்ஸ், சிக்னல்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் துடங்கிய பேபர்கள் என்றைக்கும் என்னுடைய தொடமுடியாத எவெரஸ்ட் மலையாக இருந்தாலும் கூட நான் என்னுடைய டெலிகம்முயுனிக்கேஷன் பிரிவினை நேசித்தேன். கம்ப்யூட்டர் பிரிவிடம் எனக்கு இகழ்ச்சி தான் இருந்தது அன்று. (இன்று சோறு போடுவது கம்ப்யூட்டர் தான் என்றாலும்).

பத்தும் இருவதும் பேக் பேப்பர்ஸ் சேகரிப்புடன் இன்ஜினியரிங் முடிந்தும் காலேஜில் தினமும் வருகின்ற சீனீயர்ஸ் தருகின்ற வெளியுலகின் அறிவை வைத்து “நமக்கெல்லாம் வேலை கிடச்ச மாதிரிதான்...” என்பது போன்ற கருத்தை வேலையை பற்றி நாங்கள் ஏற்றுகொண்டிருந்தோம். இருபின்னும் முயற்சிப்பதில் என்ன தவறு...?

என்னவானாலும் என்னுடைய இறுதி ஆண்டு பரிட்சை முடிந்த அடுத்த நாள், டைம்ஸ் ஓப் இந்தியாவின் வேலைவாய்ப்பு விளம்பரங்களை நான் பார்க்க தொடங்கினேன். நாசமா போக., எல்லாம் சாப்ட்வேர் வேலை தான், ‘சி லாங்குவேஜ் லேப்’ பாசாவதற்கு படிச்சது போல நான் ஜென்மத்தில மனப்பாடம் செய்து படித்ததில்லை. அப்படி செய்தும் எக்ஸாமினரின் கையும் காலும் பிடிக்க வேண்டியதாயிடுச்சு.

 நான் கொஞ்சம் வருத்தப்பட்டேன், “ஒரு யுவ டெலிகம்முயுனிக்கேஷன் இன்ஜினியரை இந்த நாட்டிற்கு தேவையில்லையா கடவுளே...” இருந்தாலும் நம்பிக்கையை கைவிடாமல் பழைய பேப்பர்களை எல்லாம் எடுத்து மீண்டும் பார்க்க தொடங்கினேன். ஆஹா...! தோ கிடக்கிறது நான் தேடி கொண்டிருந்த்தது...!!!

மேக்ஸ் டெலிகாம் ரிக்குயர் சேல்ஸ் ரேப்பிரசன்டேடிவ்ஸ் என்று விளம்பரத்தில் எழுதியிருந்தது. வேலை என்ன என்பதைவிட விளம்பரத்தில் டெலிகாம் என்ற வார்த்தை என்னை பெரிதும் கவர்ந்தது. நல்லது, அப்போ டெலிகம்முயுனிக்கேஷனுக்கும் எதிர்காலம் உண்டு. ஆனால் ஒரு பிரச்சனை, இன்டர்வியு டேட் ஒரு நாள் முன்பே முடிந்து விட்டிருந்தது.

இருந்தாலும் பரவாயில்லை, கிடைத்த இந்த வாய்ப்பை கைவிடாமல் பிடித்து கொள்ளவே நான் தீருமானித்தேன். இண்டர்வியு  கிடைத்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் போன் செய்து தெரிவித்தேன். (கம்பெனி என்னை கூப்பிடவும் இல்லை; சொல்லவுமில்லை, அது வேற விஷயம்.)

படித்து முடித்த கையோடு இண்டர்வியு கிடைத்ததில் பெற்றோர்கள் ரொம்பவும் சந்தோஷம் அடைந்தனர். அந்த சந்தோஷம் இறங்கும் முன்பே நான் 2000 ரூபாய் எடுத்து கொள்வதற்கான அனுமதியையும் பெற்றுக் கொண்டேன், புதிய இண்டர்வியு ஷர்ட்டும், பேண்ட்டும், ஷூவும் எல்லாம் வாங்குவதற்கு..!

அதன் பின் உள்ள என்னுடைய இரண்டு நாட்களுமே தயார்படுத்திக் கொள்வதிலாக இருந்தது. நாலு வருஷத்தின் டெலிக்கோம் சப்ஜெக்ட்ஸ் எல்லாம் மீண்டும் மறித்து பார்த்தேன், கீ பாயிண்ட்ஸ் நோட் செய்து கொண்டேன். முந்தைய நாள் இரவில் நான் கண்ணாடி முன்பாக நின்று கொண்டு இண்டர்வியு பயிற்சியும் செய்து, திருப்தியடைந்தேன்.

அடுத்த நாள் காலையில் ரிச்மண்ட் ரோட்டில் உள்ள ஆபீஸில் நான் 9:30க்கே  வந்தடைந்தேன். முற்றிலும் நவீனமான ஆபீஸ் செட்-அப், என்னுடைய வருங்கால ஆபீசைக் கண்டு எனக்கு புல்லரித்து போனது. ரொம்ப பிசியாக இருந்த ரிச்ப்ஷனிஷ்டிடம் பணிவாக இண்டர்வியு விஷயத்தை சொன்னேன்.

அத்துடன் 2  நாட்கள் முன்பே இண்டர்வியு டேட்  முடிந்த  விஷயமும்..!

கிளி மொழி கூறியது, “இப் யு வான்ட் டு அட்டென்ட் டுடே யு கேன்.” எனக்கு என்னுடைய சீனீயர்ஸினை சவுக்கடி அடிக்கலாம் போல் இருந்தது...! துரோகிகள், இவ்வளவு டிமாண்ட் இண்டஸ்ட்ரியில் இருக்கும்போது தான் நம்மை அவர்கள் தவறாக புரிந்துகொள்ள வைத்தனர்.

அவள் இண்டர்வியு நடக்கும் ஆபீஸின் அட்ரஸை தந்தாள், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. வாழ்க்கையில் முதல் இண்டர்வியு சந்திப்பதற்கு அந்த ஆபீஸை நோக்கி நான் நேரே விரைந்தேன்.....

அங்கெ நான்கு  பேர் காத்திருந்தனர் இண்டர்வியுவிற்காக. ரூமிலிருந்த ஆக்சிஜன் அனைத்தையும் இழுத்தெடுத்து கொண்டவாராக உட்கார்ந்திருந்தனர் அவர்கள். முதலில் கொஞ்சம் கௌரவம் காண்பித்தாலும் என்னுடைய ஒப்போனென்ட்சை அறிமுகபடுத்திக் கொள்ளவே நான் தீருமானித்தேன்.

இரண்டு பேர் தமிழர்கள், எம்.பி.ஏ முடித்து என்னை போல அவர்களுக்கும் இது முதல் இண்டர்வியு. அடுத்தவன் டிகிரி, ஆனால் கொஞ்சம் சேல்ஸ் அனுபவம் உண்டு. அனால் நான்காவது நபர்க்கு யாரிடமும் பேச விருப்பமில்லை, பயங்கர தலைகனம். நாங்கள் மூவரும் ஒன்றாக கூட்டம் சேர்ந்து அந்த நான்காவது நபரை குறித்து ரகசியமாக கிண்டல் செய்யத் தொடங்கினோம்.

ரிசெப்ஷனிஷ்ட் எங்களை கடந்து வந்து இன்டர்வியுவிற்கு நேரமாகி விட்டது என்று அறிவித்தாள். என்னுடைய மனதில் பத்மினியும் வைஜயந்திமாலாவும் போட்டியிட்டு நடனம் ஆட தொடங்கினர். அது வரை சேகரித்து வைத்த தைரியமெல்லாம் எங்கேயோ கசிந்தது போல்.

முதலில் ஒரு எம்.பி.ஏ காரன் உள்ளே சென்றான். ஒன்று, இரண்டு, மூன்று நிமிடம் முடியவில்லை அவன் வெளியில் வந்தான். அப்புறம், கிரிகெட் விளையாட்டு வீரர் ப்ரெட் லீ, விக்கட் வீழ்த்திய பிறகு செய்வதை போல் கை கொண்டு அக்ஷன் செய்து தன் சந்தோஷத்தை வெளிபடுத்தினான். ரிசல்ட் எங்களுக்கு புரிந்தது. அவனை பாராட்டி அவனுடைய எம்.பி.ஏ. பிரெண்டு உள்ளே சென்றான்.

எனக்கு மின் அதிர்ச்சி அனுபவப்பட்டது. இவ்வளவு சீக்கிரம் செலக்ட் ஆக வேண்டுமென்றால் என்னவாக இருக்கும் இன்வனுடைய திறமை..? உள்ளிலிருந்த பொறாமையும் பதட்டமும் மறைத்து கொண்டு நான் அவனிடம் இண்டர்வியுவை பற்றி விசாரித்தேன். அவன் கேள்விகளை வெளிபடுத்தவில்லை, அதற்கு பதிலாக அவனுடைய காலேஜில் அளிக்கப்பட்ட மோக் இண்டர்வியு ட்ரைனிங்கை பற்றி விவரித்தான். அவனுடைய நண்பன் பாசாவான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் ஐய்யமில்லை.

சத்தியம்.....! மூன்று நிமிடம் முடிந்திருக்க் வாய்ப்பில்லை, அதற்கு முன்பே உள்ளே சென்ற எம்.பி.ஏ.காரன் வெளியில் வந்தான். அவனும் சந்தோஷத்தில் நடனமாடினான். அதற்கு பின் மூன்றாவது வேட்பாளரும் உள்ளே சென்றான்.

என்னுடைய மனதில் பெரும்பறை கொட்ட தொடங்கியது, கடவுளே அடுத்த சுற்று என்னுடையது, போனவர்கள் எல்லாம் 2 – 3 நிமிடங்களுக்கு உள்ளில் பாசாகி ரெகார்ட் போட்டு விட்டார்கள். எல்லாவறையும் கேலி செய்து இனி நான் மட்டும் பாசாகவில்லை என்றால் என்னவாகும் என் அவஸ்த்தை.

பயமும் பதட்டமும் சேர்ந்து கொண்ட காரணத்தால் கையும் காலும் நடுங்க ஆரம்பித்தது. இனி இண்டர்வியுவின் விஷயம் சுவாஹா... தான். அவர்கள் என்னை ஒரு நிமிடத்திற்குள்ளே அடித்து வெளியே துரத்தப் போகிறார்கள்.

இதிலிருந்து தப்பித்து கொள்வதற்கு என்ன வழி...? நான் தீவிரமாக சிந்தித்தேன்.

ஐடியா...! என்னை இண்டர்வியுவர் வெளியேற்றினால் நானும் வெளியே வந்து ப்ரெட் லீயின் அக்ஷனை கடன் வாங்கி ஆரவாரம் செய்வேன். வெளியில் செலக்டாகி நிற்கின்ற மச்சான்களுக்கு விஷயம் தெரியும் முன்பு பெங்களூரு மாநகரத்திற்குள் மூழ்கிவிட வேண்டியது தான்.

இதோ மூன்றாவது சென்றவனும் வந்துவிட்டான், உதட்டில் புன்னகையுடன். நான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து இயந்திரத்தனமாக இண்டர்வியு போர்டை நோக்கி நடந்தேன். தூக்கிலிட போகும் கைதிகளின் அதே மனநிலையுடன். நனைந்த கோழியை போன்று அமர்ந்திருக்கும் என்னிடம் அவர் கேள்வி கேட்க தொடங்கினார்.

இண்டர்வியுவர் : “இந்த வேலையை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன...?”

நான் எனக்கு டெலிகம்முனிக்கேஷன் பீல்டில் உள்ள ஈர்ப்பு, படித்த பீல்டிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை போன்று ஒன்றிரண்டு காரணங்களை திக்கி திக்கி அவரிடம் சொல்லி வைத்தேன்.

இண்டர்வியுவர் : “இது உன்னுடைய முதல் இண்டர்வியு தானே..? ”

நான் ; “ஆமாம்!!”

இண்டர்வியுவர் தலையை சரித்து என்னை பார்த்து ஒரு புன்சிரிப்பு அளித்தார். எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.....????

அவர் சொன்னார், “யெஸ், யு ஆர் செலக்டெடு.”

ஏழாம் சொர்கம் பிடித்தது போன்ற ஒரு உணர்வு இருந்தது எனக்கு அந்நிமிஷங்களில்.....!!!!!

மகிழ்ச்சியுடன் திரும்பி நம்ம மச்சான்களுடன் சந்தோஷம் பங்கு வைக்கும் போது நான்காவது சென்றவனும் வேலை கிடைத்து வந்திருந்தான். இனி அவனிடம் மட்டும் இடைவெளி வைப்பது ஏன்...? எல்லோரும் சக பணியாளர்கள் அல்லவா. நங்கள் நான்காவது நபரையும் அருகில் அழைத்து அறிமுகம் செய்து கொண்டோம்.

இரண்டு புதிய எம்.பி.ஏ. காரர்களையும் ஒரு யுவ இன்ஜினியரையும் முட்டாள்கள் ஆக்குகின்ற அவனுடைய குவாலிபிக்கேஷன் அறிக்கை வந்தது தீடிரென்று தான். பையன் பத்தாம் கிளாஸ் பாசாகவில்லை..!!

நாங்கள் என்ன சொல்வதென்று அறியாமல் வாய் பிளந்து நின்ற போது ரிசெப்ஷனிஸ்ட் எங்களை உள்ளே அழைத்தார். சேல்ஸ் லீடரை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக!.

                                             ******************
ஒய்வு நேரங்களில், பயண வேளைகளில் படித்து ரசிப்பதற்கு இது  போன்ற 20 பொழுதுபோக்கு கதைகள்  உள்ளடங்கிய ஒரு Free Android App download செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை  கிளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=com.symbell.Tamilmangoseason



No comments:

Post a Comment